முப்படையினரை வாழ்த்துவோம்: அகில இந்திய வானொலியில் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி

தீபாவளியை முன்னிட்டு, எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வரும் ராணுவ வீரர்களுக்கு வாழ்த்துச் சொல்லும் நிகழ்சியை ஒலிபரப்ப அகில இந்திய வானொலி ஏற்பாடு செய்துள்ளது.
முப்படையினரை வாழ்த்துவோம்: அகில இந்திய வானொலியில் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி

சென்னை
தீபாவளியை முன்னிட்டு, எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வரும் ராணுவ வீரர்களுக்கு வாழ்த்துச் சொல்லும் நிகழ்சியை ஒலிபரப்ப அகில இந்திய வானொலி ஏற்பாடு செய்துள்ளது.

இந்த முப்படையினரை வாழ்த்துவோம் என்ற நிகழ்ச்சி நாளையும் நாளை மறுநாளும் சென்னை வானொலி விவித்பாரதியின் அலைவரிசையில் பிற்பகல் 3 மணிக்கு ஒலிக்கிறது.

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் பாதுகாப்பிற்காக எல்லையில் பல்வேறு சவால்களை சந்தித்து வரும் நமது ராணுவ வீரர்களுக்கு, பொதுமக்கள் பண்டிகை வாழ்த்துக்களைத் தெரிவிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.

பிரதமரின் இந்த வேண்டுகோளை ஏற்று வானொலியில் சிறப்பு நிகழ்ச்சி ஒலிபரப்பாகிறது. நிகழ்ச்சியில் பங்கு பெற்று வாழ்த்து சொல்ல விரும்புவோர் 24987255, 24987355 என்ற தொலைபேசி இலக்கங்களில் நாளை பிற்பகல் 3 மணிக்கு தொடர்பு கொண்டு ராணுவ வீரர்களுக்கு வாழ்த்துச் சொல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com