மக்களின் நலன் ஒன்றே பாஜகவின் கொள்கை: நரேந்திர மோடி

மக்களின் நலன் ஒன்றே பாஜகவின் கொள்கை. நாங்கள் எதற்காகவும் எங்களின் கொள்கைகளை விட்டுத்தர மாட்டோம் என பிரதமர்
மக்களின் நலன் ஒன்றே பாஜகவின் கொள்கை: நரேந்திர மோடி

கோழிக்கோடு: மக்களின் நலன் ஒன்றே பாஜகவின் கொள்கை. நாங்கள் எதற்காகவும் எங்களின் கொள்கைகளை விட்டுத்தர மாட்டோம் என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

கேரள மாநிலம், கோழிக்கோட்டில் பண்டிதர் தீனதயாள் உபாத்யாயாவின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசியதாவது:

மக்களின் நலன் ஒன்றே பாஜகவின் கொள்கை. உண்மையான குணம். அனைவரையும் விட நாடு மிகவும் முக்கியம். இதில் தங்கள் கட்சி சமரசம் எதுவும் செய்து கொள்ளாது நாங்கள் எதற்காகவும் எங்களின் கொள்கைகளை விட்டுத்தர மாட்டோம்.

பண்டிட் தீனதயாள் உபாத்யாயா கோழிக்கோட்டில்தான் ஜனசங்கின் தலைவராக நியமிக்கப்பட்டார். அவரிடம் ஒருமுறை பிரதமர், எத்தனை ஆண்டுகள் உன்னால் பிரதமராக இருக்க முடியும் என கேட்டார். அதற்கு அவர், ஒருவர் எவரெஸ்ட் வரை சென்ற பிறகு அதற்கு மேல் செல்ல ஒன்றும் இல்லை. ஆனால் வரலாறு படைக்க முடியும் என்றார்.

இந்த நாட்டில் 125 மில்லியன் மக்கள் கனவுகளுடனும், இளமையான இந்த நாடு இளமையாகவே இருக்க வேண்டும் என்ற முடிவுடனும் உள்ளனர். சுதந்திரத்திற்கு பிறகு அரசியலில் பல மாற்றங்கள் வந்துள்ளன. அவை ஜனநாயகத்திற்கு ஆபத்தை ஏற்படுத்துவதாகவே உள்ளன.

நாட்டின் தேர்தல் நடைமுறைகளில் மாற்றம் செய்வது குறித்து விவாதிக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. இஸ்லாமியர்களை வாக்கு வங்கியாக கருதாமல் அவர்களுக்கு சம அதிகாரம் தருவது அவசியம் என்று பண்டிட் தீனதயாள் உபாத்யாயா 50 ஆண்டுகளுக்கு முன்பே கூறியுள்ளார்.

இஸ்லாமிய மக்களை கவுரவிக்கவும் வேண்டாம், இழிவுபடுத்தவும் வேண்டாம். அவர்களுக்கு அதிகாரத்தை கொடுங்கள் அவர்களையும் சக மனிதர்களாக பாருங்கள். கிழக்கு மாநில மக்களின் வளர்ச்சியில் கவனம் செலுத்துங்கள். இந்தியாவின் கடைக்கோடி குடிமகனுக்கும் நலத்திட்டங்களை கொண்டு செல்வது பாஜக அரசின் நோக்கமாக உள்ளது என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com