ரயில் பயணத்தின் போது இடையூறா? அழையுங்கள் 182

ரயில் பயணிகள் பாதுகாப்புக்கு அழைக்க 182 என்ற இலவச அழைப்பு எண் ஈரோட்டில் வெளியிடப்பட்டது.

ஈரோடு: ரயில் பயணிகள் பாதுகாப்புக்கு அழைக்க 182 என்ற இலவச அழைப்பு எண் ஈரோட்டில் வெளியிடப்பட்டது.
சமீப காலமாக ரயில் பயணிகளின் அஜாக்கிரதையை பயன்படுத்தி நூதன முறையில் விலை உயர்ந்த பொருட்களை திருடியும், பெண்களிடம் சில்மிஷம் செய்வது, குடி போதையில் சக பயணிகளிடம் தகராறு செய்வது போன்ற செயல்கள் அதிகரித்து வருகின்றன.
இதுபோன்ற இன்னல்களை தவிர்த்து சுகமான ரயில் பயணத்தை மேற்கொள்ளும் வகையில் ரயில்வே பாதுகாப்பு படை உதவிக்கு அழைக்க 182 என்ற இலவச அழைப்பு எண்ணை ஈரோடு ரயில்வே நிலையத்தில் அறிமுகம் செய்துள்ளது.
நேற்று முன் தினம் கோவை, நேற்று ஈரோட்டில் இந்நிகழ்ச்சி நடந்தது. இன்று சேலத்தில் நடைபெறுகிறது.
ரயிலில் மட்டுமின்றி பிளாட்பார்ம்களில் ஏற்படும் பிரச்சனை குறித்தும் பயணிகள் புகார் அளிக்கலாம். சேலம் டிவிசன் கண்ட்ரோல் அறை சேலத்தில் இருக்கும். அழைப்புகள் முதலில் அங்கு செல்லும், அங்கிருந்து சம்பந்தப்பட்ட ஸ்டேஷன்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும். இதன் மூலம் தவறு செய்பவர்களை உடனுக்குடன் கண்டறிந்து சட்டரீதியான நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என ஆர்பிஎப் இன்ஸ்பெக்டர் நடராஜன் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com