ஆசியக் கோப்பை ஹாக்கி தொடர்:5-4 என்ற கணக்கில் சாம்பியன் பட்டத்தை வென்றது  இந்தியா 

வங்காளதேசம் தலைநகர் டாக்காவில் 18 வயதிற்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை ஹாக்கி தொடர் நடைபெற்றது.
ஆசியக் கோப்பை ஹாக்கி தொடர்:5-4 என்ற கணக்கில் சாம்பியன் பட்டத்தை வென்றது  இந்தியா 

டாக்கா

வங்காளதேசம் தலைநகர் டாக்காவில் 18 வயதிற்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை ஹாக்கி தொடர் நடைபெற்றது.

அரையிறுதியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியாவும், சீன தைபே அணியை வீழ்த்தி போட்டியை நடத்தும் வங்காள தேசமும் இறுதிப் போட்டிக்கு முன்னேறின. இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியாவும், வங்காள தேசமும் பலப்பரீட்சை நடத்தின.

இந்திய வீரர்களின் அபார ஆட்டத்திற்கு ஈடுகொடுத்து போட்டியை நடத்தும் வங்காள தேசம் விளையாடியது. முதலில் வங்க தேச அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

பின்னர் இந்திய அணி 3-2 என்ற நிலையில் முன்னிக்கு வந்தது. பின்னர்  இரு அணிகளும் கோலுக்கு கோல் பதிலடி கொடுத்தன. கடைசி நிமிடத்தில் இந்தியா 5-4 என்ற கணக்கில் வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com