சார்க் மாநாட்டை புறக்கணிப்பதாக இலங்கை அறிவிப்பு

சார்க் மாநாட்டை புறக்கணிப்பதாக இலங்கை அறிவித்துள்ளது. மேலும் இஸ்லாமாபாத்தில் சார்க் மாநாடு நடைபெறுவதற்கான சூழல் தற்போது இல்லை
சார்க் மாநாட்டை புறக்கணிப்பதாக இலங்கை அறிவிப்பு

கொழும்பு

சார்க் மாநாட்டை புறக்கணிப்பதாக இலங்கை அறிவித்துள்ளது. மேலும் இஸ்லாமாபாத்தில் சார்க் மாநாடு நடைபெறுவதற்கான சூழல் தற்போது இல்லை என்றும் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறியுள்ளதாவது:-

அனைத்து விதமான முடிவுகளும் ஒருமித்த உணர்வுடன் எடுக்கப்பட வேண்டும் என்று சார்க் சாசனத்தின் பொது விதிகள் வலியுறுத்துகிறது. சார்க் நாடுகளின் தலைவர்களை கூட்டுவதற்கும் இது பொருந்தும். அனைத்து வகையான தீவிரவாதத்தையும் இலங்கை கண்டிக்கிறது.

சார்க் நாடுகளின் பகுதிகளில் நிலவி வரும் தீவிரவாதம் தொடர்பான பிரச்சனைகளை தீர்மானகரமான முறையில் எதிர்கொள்ள வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளது.

சார்க் அமைப்பில் உள்ள 5 நாடுகள் மாநாட்டை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளதால், சார்க் மாநாடு ரத்தாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

சார்க் மாநாடு நடக்குமா இல்லையா என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை (அக்.,1) வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com