பாகிஸ்தானால் பிடித்து வைக்கப்பட்டுள்ள இந்திய ராணுவ வீரரை மீட்க தீவிர முயற்சி: ராஜ்நாத் சிங்

பாகிஸ்தானால் பிடித்து வைக்கப்பட்டுள்ள இந்திய ராணுவ வீரரை மீட்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
பாகிஸ்தானால் பிடித்து வைக்கப்பட்டுள்ள இந்திய ராணுவ வீரரை மீட்க தீவிர முயற்சி: ராஜ்நாத் சிங்

பாகிஸ்தானால் பிடித்து வைக்கப்பட்டுள்ள இந்திய ராணுவ வீரரை மீட்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், எல்லைப் பகுதி உள்பட நாட்டின் பாதுகாப்பு நிலவரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தற்செயலாக பாகிஸ்தான் எல்லைக்குள் சென்றதைத் தொடர்ந்து, அந்நாட்டில் பிடித்து வைக்கப்பட்டுள்ள இந்திய ராணுவ வீரரை மீட்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன' என்றார்.

இவ்வாறு ராணுவ வீரர்களும், அப்பாவிப் பொதுமக்களும் தங்களையும் அறியாமல் எல்லை தாண்டிச் சென்று விடுவது என்பது இந்தியா-பாகிஸ்தான் ஆகிய இரு தரப்பிலுமே அவ்வப்போது நடப்பதுதான் என்றும் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.  

இதனிடையே, இந்திய ராணுவத்தினர் வியாழக்கிழமை அத்துமீறிச் சுட்டதாகவும் அதற்குப் பதிலடியாக தங்கள் நாட்டு வீரர்கள் சுட்டதில் இந்திய வீரர்கள் 8 பேர் உயிரிழந்ததாகவும் ஒருவர் பிடிபட்டதாகவும் பாகிஸ்தான் ஊடகங்களில் ஒரு செய்தி வெளியானது. இது தவறான செய்தி என்று இந்திய ராணுவம் மறுத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com