நியூயார்க்கை விட 3 மடங்கு பெரிய நகர் ஒன்றை உருவாக்க சீனா முடிவு

கடுமையான சுற்றுச்சூழல் மற்றும் காற்று மாசுபாட்டில் சிக்கித் தவிக்கும் சீனா, சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் போக்குவரத்து நெரிசல் ஆகியவை இல்லாமல் புதிய நகர் ஒன்றை உருவாக்க  முடிவு செய்துள்ளது.

பெய்ஜிங்: கடுமையான சுற்றுச்சூழல் மற்றும் காற்று மாசுபாட்டில் சிக்கித் தவிக்கும் சீனா, சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் போக்குவரத்து நெரிசல் ஆகியவை இல்லாமல் புதிய நகர் ஒன்றை உருவாக்க  முடிவு செய்துள்ளது.

சீன அதிபர் ஜி ஜின்பிங் தலைமையில்  நடந்த உயர்மட்ட தலைவர்கள் கூட்டத்தில் இது தொடர்பான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. புதிதாக உருவாகும் நகரம் தலைநகர் பெய்ஜிங்கிலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் அமைய உள்ளது.

அமெரிக்காவின் முக்கிய நகரான நியூயார்க்கை விட புதிய நகரம் 3 மடங்கு பெரியதாக இருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கான பூர்வாங்க பணிகள் விரைவில் தொடங்க இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய நகரம் உருவாக்கப்படுவது குறித்து சீன அதிபர் ஜி ஜின்பிங் கூறும்போது, "புதிதாக உருவாக்கப்படும் இந்த நகரத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படடும். மேலும் மக்களின் வாழ்வை மேம்படுத்தக் கூடியதாக இந்நகரம் இருக்கும்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com