தில்லியின் ரஜோரி கார்டன் தொகுதியில் பா.ஜ.க. அமோக வெற்றி 

தில்லியின் ரஜோரி கார்டன் தொகுதியில் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்றது. பா.ஜ.க. வேட்பாளர் மன்ஜீந்தர் சங் சிர்சா, 14652 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
தில்லியின் ரஜோரி கார்டன் தொகுதியில் பா.ஜ.க. அமோக வெற்றி 

புதுதில்லி: தில்லியின் ரஜோரி கார்டன் தொகுதியில் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்றது. பா.ஜ.க. வேட்பாளர் மன்ஜீந்தர் சங் சிர்சா, 14652 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இவர் மொத்தம் 40602 வாக்குகள் பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி சண்டேலா 25950 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்தார். ஆளுங்கட்சியான ஆம் ஆத்மி வேட்பாளர் ஹர்ஜீத் சிங் 10243 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டார். டெபாசிட் தொகையையும் இழந்தார்.

இந்த தொகுதியானது ஆம்ஆத்மி வசம் இருந்தது. இங்கு எம்.எல்.ஏ.வாக இருந்த ஜர்னைல் சிங் ராஜினாமா செய்து விட்டு பஞ்சாப் தேர்தலில் போட்டியிட்டார். இப்போது நிறுத்தப்பட்ட அக்கட்சி வேட்பாளர் ஹர்ஜீத்சிங் படுதோல்வி அடைந்தது

ஆளும் ஆம்ஆத்மி கட்சிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. தில்லி தேர்தல் வெற்றியை பா.ஜனதாவினர் உற்சாகத்துடன் கொண்டாடினார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com