இருதயத்தில் துளை: 7 மணி நேரத்தில் 7 நோயாளிகளுக்கு சிகிச்சை - ஸ்டான்லி மருத்துவனை சாதனை

பிறவியிலேயே இருதயத்தில் துளை காணப்பட்ட 7 நோயாளிகளுக்கு 7 மணி நேரத்தில் சிகிச்சை

பிறவியிலேயே இருதயத்தில் துளை காணப்பட்ட 7 நோயாளிகளுக்கு 7 மணி நேரத்தில் சிகிச்சை அளித்து ஸ்டான்லி அரசு மருத்துவமனை சாதனை படைத்துள்ளது.

குழந்தைகளுக்கு பிறவியிலேயே ஏற்படும் இருதய பாதிப்புகளில் முக்கியமானது இருதய சுவரில் துளை காணப்படுவது ஆகும். 10 லட்சம் குழந்தைகள் பிறப்பில் 950 பேருக்கு இந்த பாதிப்பு காணப்படுகிறது. இந்தக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டோருக்கு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் நவீன சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மருத்துவமனையின் இருதயவியல் துறையின் தலைவர் டாக்டர் கே.கண்ணன், பேராசிரியர் சி.மூர்த்தி ஆகியோர் வியாழக்கிழமை கூறியது: இந்தக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நெஞ்சுப் பகுதியைத் திறந்து அறுவைச் சிகிச்சை செய்யும் முறையே பெரும்பாலும் செய்யப்படுகிறது. ஆனால் அறுவைச் சிகிச்சையின்றி இந்த செயல்முறை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

 அதன்படி, நோயாளியின் வலது காலின் வழியே ஒரு குழாய் செருகப்படும். அதன் வழியாக வலை போன்ற ஒரு சாதனம் செலுத்தப்படும். இந்தக் குழாய் இருதயத்தில் காணப்படும் துளையின் வழியாக மறுபுறத்துக்கு செலுத்தப்படும். அதன் பின்பு குழாயை அகற்றும் வகையில் பின்புறமாக இழுக்கும்போது, அதில் செலுத்தப்பட்டிருந்த வலை போன்ற சாதனம் விரிந்து துளையை அடைக்கும். 

வாழ்நாள் முழுவதற்கும் இந்த சாதனைத்தை அகற்ற வேண்டியதில்லை. நோயாளிகள் தங்கள் இயல்பு வாழ்க்கையை மேற்கொள்ளலாம்.  இந்தச் சிகிச்சை எங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 7 நோயாளிகளுககு ஏப்ரல் 10-ஆம் தேதி செய்யப்பட்டது. காலை 8.30 மணி முதல் மாலை 3.30 மணி நேரம் சிகிச்சை நடைபெற்றது. இரண்டவரை வயது குழந்தை முதல் 45 வயதுடையவர் வரை இந்தச் சிகிச்சை செய்யப்பட்டது. ஒரே நாளில் அதிகமானோருக்கு இந்தச் சிகிச்சை செய்யப்பட்டது தமிழகத்தில் இதுவே முதன்முறையாகும் என்றனர்.

 தனியார் மருத்துவமனையில் ரூ.3 லட்சம் செலவில் செய்யப்படும் இந்த சிகிச்சை முறை முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இலவசமாகச் செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com