மருத்துவ பட்டமேற்படிப்பு இடங்களுக்கான கல்வி கட்டணம் நிர்ணயம் செய்ய அதிமுக வலியுறுத்தல்

மருத்துவ, மற்றும் பல் மருத்துவ பட்டமேற்படிப்பு (PG) இடங்களுக்கான கல்விக் கட்டணத்தை உடனே நிர்ணயிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

புதுச்சேரி: மருத்துவ, மற்றும் பல் மருத்துவ பட்டமேற்படிப்பு (PG) இடங்களுக்கான கல்விக் கட்டணத்தை உடனே நிர்ணயிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டப்பேரவை அதிமுக தலைவர் ஆ.அன்பழகன் எம்.எல்.ஏ. வலியுறுத்தி உள்ளார்.

புதுச்சேரியில் மொத்தமுள்ள 300 பட்டமேற்படிப்பு இடங்களில் 50 சதவீதம் இடங்களை வாங்காமல் காங்கிரஸ் அரசு மெத்தனம் காட்டி வந்தது. தற்போது உச்சநீதிமன்றம், மத்திய சுகாதாரத்துறை, இந்திய மருத்துவக்கவுன்சில் ஆணையின்படி 50 சதவீத இடங்கள் அரசு ஒதுக்கீட்டுக்கு தரப்பட்டுள்ளன. ஆனால் நீட் தகுதி பெற்றாலும் மாணவர்கள் பட்டமேற்படிப்பில் சேர முடியாத நிலை உள்ளது. குறிப்பாக கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. நீதிபதி ராஜேஸ்வரன் தலைமையிலான கல்விக் கட்டணக் குழுவை உடனே கூட்டி கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும். சென்டாக் மூலம் ஓரே கலந்தாய்வை நடத்த வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com