ஆடிப்பெருக்கு; பக்தர்கள் புனித நீராடல்

தமிழகத்தில் ஆடிப்பெருக்கையொட்டி காவிரி ஆறு உள்ளிட்ட நீர் நிலைகளில் பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர்.
ஆடிப்பெருக்கு; பக்தர்கள் புனித நீராடல்

தமிழகத்தில் ஆடிப்பெருக்கையொட்டி காவிரி ஆறு உள்ளிட்ட நீர் நிலைகளில் பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். கிருஷ்ணகிரி- போச்சம்பள்ளி தென்பெண்ணை ஆறு, சுருளி அருவி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மக்கள் புனித நீராடி வருகின்றனர்.

மேலும் ராமபிரான் அசுரர்களை வதம் செய்த பாவம் நீங்க, வசிஷ்ட முனிவரிடம் வழி கேட்டார். வசிஷ்டர், ‘அறுபத்தாறு கோடி தீர்த்தங்களைத் தன்னிடம் கொண்ட காவிரிக்கு, தட்சிண கங்கை என்று பெயர். அந்த நதியில் நீராடினால் உன் பாவ உணர்வுகள் நீங்கும்’ என்று கூறினார். அதன்படி ராமச்சந்திர மூர்த்தி, காவிரியில் நீராடி தன்னுடைய பாவங்களைப் போக்கிக் கொண்டார். அவர் காவிரியில் நீராடிய நாள் ஆடிப்பெருக்கு என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.

அம்மனுக்கு தேங்காய், பழம், பூ, காதோலை கருகமணி படைத்து ஆராதனை செய்வார்கள். இதனால் வீட்டில் மங்கள காரியங்கள் தடையின்றி நடைபெறும் என்பது நம்பிக்கை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com