பொங்கல் பண்டிக்கைக்கு வழங்கும் இலவச வேட்டி சேலை திட்டத்துக்கான ஒப்பந்தப்புள்ளி ரத்து

இலவச வேட்டி சேலை  திட்டத்துக்கான நூல் கொள்முதல் ஒப்பந்தப்புள்ளியை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொங்கல் பண்டிக்கைக்கு வழங்கும் இலவச வேட்டி சேலை திட்டத்துக்கான ஒப்பந்தப்புள்ளி ரத்து

சென்னை:  இலவச வேட்டி சேலை  திட்டத்துக்கான நூல் கொள்முதல் ஒப்பந்தப்புள்ளியை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் அடுத்தாண்டு (2018) பொங்கல் பண்டிகைக்காக பொது மக்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டத்துக்காக நூல் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பாணையை ஜூன் 22 ஆம் தேதி தமிழக அரசு வெளியிட்டது. 

இந்த ஒப்பந்தப்புள்ளியில் பங்கேற்கும் நிறுவனங்கள் சாயக் கழிவுநீரை வெளியேற்றவில்லை என்ற மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டுமென நிபந்தனை விதிக்கப்பட்டது. 

இதை நிபந்தனையை எதிர்த்து விருதுநகர் மாவட்டம், சோழபுரத்தில் உள்ள ஸ்ரீ வெங்கட்ராம் நூற்பாலை உள்ளிட்டோர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டன.  அந்த மனுக்களில், தங்கள் நிறுவனத்தின் நூலை சாயம் ஏற்ற மும்பையில் உள்ள சாயப்பட்டறையுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரம் போன்ற பல மாநிலங்களில் சாயக் கழிவு நீரை நேரடியாக கடலில் அனுமதிக்கப்பட்ட ஆழத்தில் கலப்பதற்கு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி வழங்கப்படுகிறது.  

எனவே,  பிற மாநில நிறுவனங்கள் இந்த ஒப்பந்தப்புள்ளியில் பங்கேற்பதை தவிர்க்கும் வகையில் விதிக்கப்பட்ட நிபந்தனையை தளர்த்துவதோடு,  இந்த ஒப்பந்தப்புள்ளி நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தனர்.

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், ஒப்பந்தப்புள்ளியை இறுதி செய்ய இடைக்கால தடை விதித்தும், மனுதாரரின் ஒப்பந்தப்புள்ளி பங்கேற்க சமர்ப்பித்த விண்ணப்பத்தையும் நிராகரிக்க கூடாது என்றும் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில்,  இந்த வழக்கில் நீதிபதி எம்.துரைசாமி பிறப்பித்த உத்தரவு வருமாறு...

ஒப்பந்தப்புள்ளி விதிகளின்படி, ரூ.2 கோடிக்கு மேலான ஒப்பந்தங்களுக்கு, விண்ணப்பங்களை சமர்ப்பிக்க 30 நாள்கள் கால அவகாசம் வழங்க வேண்டும். ஆனால், இவற்றை மீறும் வகையில் இந்த ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளது என மனுதாரர் தரப்பில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

மேலும், ரூ.50 கோடி மேல் மதிப்புள்ள ஒப்பந்தப்புள்ளியை இந்திய வர்த்தக பத்திரிகையில் வெளியிட வேண்டும். ஆனால், ரூ.450 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தம் குறித்து அந்த பத்திரிகையில் வெளியிடப்படவில்லை என்பதும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க 15 நாள்கள் மட்டுமே கால அவகாசம் அளிக்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

இவற்றை பார்க்கும் போது, விதிகளை பின்பற்றாமல் கடந்த ஜூன் 22 ஆம் தேதி வெளியிட்ட ஒப்பந்தப்புள்ளியை ரத்து செய்யப்படுகிறது. மேலும், தமிழ்நாடு ஒப்பந்தப்புள்ளி வெளிப்படை தன்மை சட்ட விதிகளுக்கு உட்பட்டு, புதிதாக ஒப்பந்தப்புள்ளியை கோர தமிழக அரசுக்கு அனுமதியளித்தும் நீதிபதி எம்.துரைசாமி உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com