வெள்ளச் சேதம்: நேபாளத்திற்கு சீனா ஒரு மில்லியன் டாலர் நிதி உதவி 

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்திற்கு சீனா ஒரு மில்லியன் டாலர் நிதி உதவி வழங்குவதாக அறிவித்துள்ளது.
வெள்ளச் சேதம்: நேபாளத்திற்கு சீனா ஒரு மில்லியன் டாலர் நிதி உதவி 

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்திற்கு சீனா ஒரு மில்லியன் டாலர் நிதி உதவி வழங்குவதாக அறிவித்துள்ளது.

இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் வகையில் நடந்த இருநாட்டு துணைப் பிரதமர்களின் கூட்டுப் பேச்சுவார்த்தையில் இது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் நேபாளத்தின் நிதியமைச்சர், சுகாதாரம், சுற்றுலாத்துறை மற்றும் நேபாள முதலீட்டு வாரியத்தின் தலைவர்கள், தேசிய திட்டமிடல் ஆணையம், தேசிய புனரமைப்பு ஆணையம் ஆகியவற்றின் செயலாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர். 

வெள்ளத்தில் சிக்கி 90 பேர் பலியாகினர். நேபாளத்தின் பெரும்பாலான பகுதி வழியாக ஓடும் ராப்தி நதி பெருக்கெடுத்துள்ளதால் அதன் வழியெங்கும் கரையோரங்களில் கடும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

6 மில்லியன் பேர் நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு உடமைகள் மற்றும் குடியிருப்புகளை இழந்து தவிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com