ஒவ்வொரு இந்திய குடிமகனும் தனது செயல்பாடுகளால் புதிய இந்தியாவை உருவாக்கிட முடியும்: பிரதமர் மோடி

தில்லியில் இன்று நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
ஒவ்வொரு இந்திய குடிமகனும் தனது செயல்பாடுகளால் புதிய இந்தியாவை உருவாக்கிட முடியும்: பிரதமர் மோடி

புதுtதில்லி: தில்லியில் இன்று நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

இந்திய நாட்டின் வளர்ச்சியில் அக்கறை கொண்டுள்ள ஒவ்வொரு குடிமகனும் தன்னால் ஆன பங்களிப்பை நிச்சயம் செய்வார்கள் என நம்புகிறேன். இப்போது நான் காணும் இளைய தலைமுறையினர் துடிப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.

அவர்களுடன், அனுபவம் வாய்ந்த அதிகாரிகளும் இணைந்து செயல்பட வேண்டும். அப்படி இளமையும், அனுபவமும் சேர்ந்து செயல்படுவதன் மூலம் நாட்டின் வளர்ச்சி மேம்படும். மத்திய அரசு எடுத்து வரும் முயற்சிகளால் மட்டுமே புதிய இந்தியாவை உருவாக்கிவிட முடியாது.

ஒவ்வொரு இந்திய குடிமகனும் தனது செயல்பாடுகளால் புதிய இந்தியாவை உருவாக்கிட முடியும். மேலும் தொழில் முனைவோர்களுக்கான 6 குழுக்கள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் 35 வயது முதல் 40 வயதுடையோர்கள் இடம்பெற்றுள்ளனர். அவர்களின் ஆலோசனைப்படி அந்த குழுக்கள் செயல்படும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com