முதல்வரின் அறிவிப்பு: பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களின் எதிர்ப்பும் ஆதரவும் 

தலைமைச் செயலகத்தில் இன்று மாலை செய்தியாளார்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்
முதல்வரின் அறிவிப்பு: பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களின் எதிர்ப்பும் ஆதரவும் 

தலைமைச் செயலகத்தில் இன்று மாலை செய்தியாளார்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இறப்பு குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில்  விசாரணை ஆணையம் அமைக்கப்படும். ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை அரசு நினைவிடமாக மாற்றி பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்படும் என்று கூறினார்.

இதையடுத்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் முதல்வரின் இந்த முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்புக்கு தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்னர். 

பா.ம.க நிறுவனர் ராமதாஸ்

பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள கருத்தில் ஜெயலலிதா மரணம் பற்றி நீதி விசாரணை என்பது அரசியல் சித்து விளையாட்டின் அங்கம் எனவும் நீதி விசாரணை நடத்துவதால் எந்தப் பயனும் இல்லை என்றும் கூறியுள்ளார். 

டி.கே.எஸ்.இளங்கோவன்

பாஜக அழுத்தத்தால் தான் முதல்வர் பழனிசாமி, 2 அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளார் என்று டி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார். முதல்வரின் அனைத்து செயல்படுகளுக்கு பின்னாலும் பாஜகவின் அழுத்தம் உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

சசிகலா புஷ்பா

டி.டி.வி தினகரனுடன் மோதல் ஏற்பட்ட பிறகுதான் நீதி விசாரணையை முதல்வர் அறிவிக்கிறார் என்று மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா கூறியுள்ளார். 

திருநாவுக்கரசர்

வேதா நிலையம் அரசு நினைவிடமாக மாற்றப்படும் என்ற அறிவிப்பை வரவேற்பதாக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கருத்து தெரிவித்துள்ளார். வேதா நிலையத்தின் மற்ற பகுதிகள் சொத்து குவிப்பு வழக்கில் தொடர்பு இருக்கிறதா என்பது தெரியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

தம்பிதுரை

முதல்வரின் அறிவிப்பிற்கு வரவேற்பு தெரிவித்துள்ள அதிமுகவின் மூத்த தலைவர் தம்பிதுரை, கருத்து வேறுபாடுகளை கடந்து அனைவரும் ஒற்றுமையுடன் செயல்படவேண்டும். ஓ. பன்னீர் செல்வம் மீண்டும் கட்சியில் இணைந்து ஒற்றுமையுடன் பணியாற்றுவார் என்று நம்புகிறேன். என்று கூறியுள்ளார். 

புகழேந்தி

டி.டி.வி. தினகரன் கூறியதை ஏற்றுதான் முதல்வர் விசாரணை ஆணையம் அமைக்க உத்தரவிட்டுள்ளார். இரு அணிகளின் இணைப்புக்கான வெறும் கண் துடைப்பு அறிவிப்பாக இது இருக்க கூடாது.  விசாரணைக்கு தயாராக இருக்கிறோம் என்று டி.டி.வி.தினகரன் ஆதரவாளர் புகழேந்தி கூறியுள்ளார். 

ஹெச்.ராஜா

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கருத்தில் ஓபிஎஸ் அணியின் 2 முக்கிய கோரிக்கைகளும் ஏற்கப்பட்டுள்ளன எனவே 2 அணிகளும் உடனடியாக இணையும் என்று ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

திருமாவளவன்

முதல்வரின் இரு அறிவிப்புகளையும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்கிறது என்று திருமாவளவன் கூறியுள்ளார். 

அன்புமணி ராமதாஸ்

முதல்வரின் இந்த அறிவிப்பு யாரோ சிலரை திருப்தி படுத்துவதற்கான அறிவிப்பாக உள்ளது. சி.பி.ஐ விசாரணை வேண்டும் என்று பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். 

முதல்வரின் நீதி விசாரணை அறிவிப்பை வரவேற்கிறேன் என்று தமிழிசை கூறினார். ஜெயலலிதா இல்லத்தை நினைவு இல்லம் ஆக்குவதும் வரவேற்க வேண்டிய அறிவிப்புதான் என்று அவர் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com