வரும் 22-ம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம்: ஜாக்டோ ஜியோ அறிவிப்பு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 22-ம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்ய உள்ளதாக ஜாக்டோ ஜியோ கூறி தெரிவித்துள்ளது.
வரும் 22-ம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம்: ஜாக்டோ ஜியோ அறிவிப்பு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 22-ம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்ய உள்ளதாக ஜாக்டோ ஜியோ கூறி தெரிவித்துள்ளது.

இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் சுமார் 10 லட்சம் பேர் பங்கேற்க முடிவு செய்திருப்பதாக அந்த அமைப்பின் உயர்மட்டக்குழு உறுப்பினர் மு.சுப்பிரமணியன்  தெரிவித்தார்.

மேலும் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தையே அமல்படுத்திட வேண்டும், ஊதிய முரண்பாடுகளைக் கலைந்து 8-வது ஊதிய மாற்றத்தை உடனடியாக அமல்படுத்திட வேண்டும், அதுவரை 20 சதவிகித இடைக்கால நிவாரணம் வழங்கிட வேண்டும். சிறப்புக் காலமுறை மற்றும் தொகுப்பு, மதிப்பு ஊதியங்களை ஒழித்து வரையறுக்கப்பட்ட ஊதியம் வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் 4 கட்டப் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

முதற்கட்டமாக ஜூலை 18-ம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அரசு இந்த ஆர்ப்பாட்டத்தை ஒரு பொருட்டாகவே கருதவில்லை. இதையடுத்து இம்மாதம் 5-ம் தேதி சென்னையில் மாபெரும் பேரணியை நடத்தினோம். அதற்கும் அரசு செவி மடுக்கவில்லை. எனவே இதன் தொடர்ச்சியாக 3-வது கட்டமாக இம்மாதம் 22-ம் தேதி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தை நடத்த முடிவுசெய்துள்ளோம். 

அரசு பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்ற முன் வரவேண்டும். கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் செப்.,7-ம் தேதி முதல் காலவரையற்ற போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com