கேரளாவில் நடப்பாண்டு பருவமழை 29.1 சதவீதம் குறைவு:  பினராயி விஜயன்

கேரளாவில் நடப்பாண்டு பருவமழை 29.1 சதவீதம் குறைவாக பெய்துள்ளது என்று சட்டப்பேரவையில் உரையாற்றும்
கேரளாவில் நடப்பாண்டு பருவமழை 29.1 சதவீதம் குறைவு:  பினராயி விஜயன்

திருவனந்தபுரம்:  கேரளாவில் நடப்பாண்டு பருவமழை 29.1 சதவீதம் குறைவாக பெய்துள்ளது என்று சட்டப்பேரவையில் உரையாற்றும் போது அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறும் போது பருவ மழை பற்றாக்குறையை அடுத்து நீர் மேலாண்மைக்காக அரசு குழு ஒன்றை அமைக்க முடிவு செய்துள்ளது. ஏற்கனவே மூன்று பணிக்குழு அமைக்கப்படுள்ளது. 13,247 குளங்கள் புனரமைக்கப்பட்டன.

எனினும்  மழை பற்றாக்குறை காரணமாக மின்சார உற்பத்தியும் பாதிக்கப்ப டக்கூடும். மாநிலத்தின் பெரிய நீர் மின் திட்டங்கள் செயல்பாட்டில் உள்ள இடுக்கி வயனாடு  திருவனந்தபுரம்  ஆகிய இடங்களில் முறையே 36,59,35 சதவீதம் அளவுக்கு பருவ மழை பற்றாக்குறையாக பெய்து உள்ளது.

செப்டம்பரில் போதிய மழை பெய்யாவிட்டால்  இன்னும் நிலைமை மோசமாகும் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com