அரியலூரில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா:  முதல்வர் பழனிசாமியும் ஓ. பன்னீர்செல்வமும் ஒரே மேடையில்!

அரியலூர் அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா தொடங்கியது.
அரியலூரில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா:  முதல்வர் பழனிசாமியும் ஓ. பன்னீர்செல்வமும் ஒரே மேடையில்!

அரியலூர் அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா தொடங்கியது. தமிழக அரசு சார்பில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா மாவட்டம்தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

அரியலூரில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் இன்று நடைபெறும் விழாவில்  முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். அதிமுக அணிகள் இணைப்புக்கு பின் நடக்கும் நிகழ்ச்சியில் இன்று முதல்வர் பழனிசாமியும் ஓ. பன்னீர்செல்வமும் ஒரே மேடையில் பங்கேற்கின்றனர். 

விழாவுக்கு சட்டப்பேரவைத் தலைவர் ப. தனபால் தலைமை வகிக்கிறார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அரசு தலைமைக் கொறடா தாமரை.எஸ்.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, எம்.ஜி.ஆரின் திருவுருவப் படத்தை திறந்துவைத்து, ரூ. 5.53 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளை தொடக்கி வைத்தும், ரூ.69.05 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் அரசின் நலத் திட்டங்கள் வழங்கி விழா பேருரையாற்றுகிறார்.

இந்த நிலையில், முதல்வர், துணை முதல்வர் ஆகியோரின் அரியலூர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து செந்துறை, திருமானூர், ஆண்டிமடம், டி.பழூர், வெண்மாகொண்டான் உள்ளிட்ட 10 கிராமங்களில் உள்ள வீடுகளில் கறுப்புக்கொடி கட்டப்பட்டுள்ளது.

தி.மு.க. விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட்டுகள், பா.ம.க உள்ளிட்ட கட்சிகள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளன. எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா பாதுகாப்பிற்காக 5000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com