தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவை உரிமைக்குழுக் கூட்டம் தொடங்கியது

தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவை உரிமைக்குழுக் கூட்டம் தொடங்கியது. உரிமை குழுவில் மொத்தம் 17 உறுப்பினர்கள் உள்ளனர்.
தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவை உரிமைக்குழுக் கூட்டம் தொடங்கியது

தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவை உரிமைக்குழுக் கூட்டம் தொடங்கியது. உரிமை குழுவில் மொத்தம் 17 உறுப்பினர்கள் உள்ளனர்.

துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைவராக உள்ளார். ஆளும் கட்சியை சேர்ந்த 10 பேரும், எதிர்கட்சியை பொறுத்த வரை திமுகவை சேர்ந்த 6 பேரும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒருவரும் உறுப்பினர்களாக உள்ளனர். இதில் அதிமுக உறுப்பினர்கள் 10 பேரில் மூவர் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் ஆவர்.

உரிமை மீறல் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கவில்லை என ஏற்கனவே ஸ்டாலின் கூறியிருந்தார். இந்நிலையில் இக்குழு கூட்டத்தில் பெரும்பான்மை உறுப்பினர்கள் கலந்து கொள்ளாததால், இந்த குழுவால் பேரவைக்கு எந்த பரி்ந்துரையையும் அளிக்க முடியாது என கூறப்படுகிறது.

அரசுத் தரப்பின் முடிவுக்கு எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவிக்கும்பட்சத்தில், உரிமை மீறல் குழுவின் முடிவுகளை சட்டப் பேரவைக் கூட்டத்தில் வைத்து வாக்கெடுப்புக்கு விட வேண்டும்.

அப்படி வாக்கெடுப்புக்கு வரும் பட்சத்தில் எத்தனை பேர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என்பதுகேள்விக் குறியாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com