11 அதிமுக எம்எல்ஏக்களை தகுதி நீக்கக் கோரும் வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரிய செம்மலை மனு நிராகரிப்பு

11 அதிமுக எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கக் கோரும் வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரி செம்மலை எம்எல்ஏ தாக்கல் செய்த மனுவை
11 அதிமுக எம்எல்ஏக்களை தகுதி நீக்கக் கோரும் வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரிய செம்மலை மனு நிராகரிப்பு

புதுதில்லி: 11 அதிமுக எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கக் கோரும் வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரி செம்மலை எம்எல்ஏ தாக்கல் செய்த மனுவை நிராகரித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அரசு மீது கடந்த பிப்ரவரி மாதம் தமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. அப்போது, அதிமுகவில் தனி அணியாக செயல்பட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான 11 அதிமுக எம்எல்ஏக்கள் கட்சிக் கொறடாவின் உத்தரவை மீறி அரசுக்கு எதிராக வாக்களித்தனர். இவர்கள் மீது சட்டப்பேரவைத் தலைவர் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றம்சாட்டி, சம்பந்தப்பட்ட 11 பேரையும் தகுதி நீக்கம் செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சட்டப்பேரவை திமுக கொறடா சக்கரபாணி வழக்குத் தொடுத்தார். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. 

இந்நிலையில், அதிமுவை (ஓபிஎஸ் அணி) சேர்ந்த செம்மலை எம்எல்ஏ உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் 'சட்டப்பேரவைத் தலைவரின் அதிகார வரம்பு குறித்து விசாரிக்கும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்திற்கு உள்ளது. ஆந்திர சட்டப்பேரவை தொடர்பான இதுபோன்ற ஒரு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளதால், திமுக தொடுத்த வழக்கையும் அத்துடன் சேர்த்து விசாரிக்கும் வகையில், வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து உச் நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்த மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணையின் முடிவில், 11 அதிமுக எம்எல்ஏக்களை தகுதி நீக்கக் கோரும் வழக்கை உச்சநீதிமன்றத்திற்கு மாற்றக் கோரிய செம்மலை மனு நிராகரிப்படுவதுடன் உயர்நீதிமன்றத்தில் இருந்து உச்சநீதிமன்றத்திற்கு மாற்ற முடியாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

மேலும் சபாநாயகர் முடிவு சரியா, தவறா என்பது குறித்து மட்டுமே உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவிக்க முடியும் என்றும் 11 அதிமுக எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் கோரும் வழக்கு விசாரணையை உயர்நீதிமன்றத்திலேயே நடத்தலாம். வேறு ஏதேனும் கோரிக்கை இருந்தால் உயர்நீதிமன்றத்தையே அணுகலாம் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

இதையடுத்து ஒ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும் அதிமுக எம்.எல்.ஏ.வுமான செம்மலை தாக்கல் செய்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com