இந்திய பொருளாதார நலிவிற்கு பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி திட்டங்களே காரணம்: மன்மோகன் சிங் தாக்கு

பாஜக. ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்ட பணமதிப்பிழப்பு மற்றும் சரக்குகள் மற்று சேவை வரி(ஜிஎஸ்டி) திட்டங்களினால் நாட்டின்
இந்திய பொருளாதார நலிவிற்கு பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி திட்டங்களே காரணம்: மன்மோகன் சிங் தாக்கு

சூரத்: பாஜக. ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்ட பணமதிப்பிழப்பு மற்றும் சரக்குகள் மற்று சேவை வரி(ஜிஎஸ்டி) திட்டங்களினால் நாட்டின் பொருளாதாரம் வலுவிழந்து விட்டதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விமர்சித்துள்ளார்.

குஜராத் மாநிலத்தில் சட்டப்பேரவைக்கு இரண்டு கட்டங்களாக டிசம்பர் 9 மற்றும் 14 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது.  இதையடுத்து, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் வேட்பாளர் பட்டியல்களை வெளியிட்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சூரத்தில் தொழிலதிபர்களுடன் நடைபெற்ற கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொண்டு பேசியதாவது:

இந்தியாவின் பொருளாதார வீழ்ச்சிக்கு பாஜகவின் மோடி அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகள், குறிப்பாக "சரக்குகள் மற்றும் சேவை வரி" (ஜிஎஸ்டி) திட்டங்கள் தான் காரணம் என கடுமையாக விமர்சித்த மன்மோகன் சிங், பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி திட்டங்களினால் சீனா போன்ற நாடுகள் மட்டுமே பயன்பற்றுள்ளன. ஆனால் இந்திய மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன என்றார். 

கடந்த 5 காலாண்டுகளில் இந்தியாவில் ஜிடிபி தொடர்ந்து சரிவை சந்தித்து வந்தது. பணமதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டியால் ஜி.டி.பி., தொடர்ந்து சரிவை சந்திக்கும் என பேசப்பட்ட நிலையில், ஜூலை-செப்டம்பர் காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி 6.3 சதவீதமாக உள்ளது என கடந்த 2 தினங்களுக்கு முன்பு வந்த தகவலின் படி. இது கடந்த 5 காலாண்டு வீழ்ச்சியில் இருந்து மீண்டுள்ளது. 

‛‛கடந்த 5 காலாண்டு விழ்ச்சியடைந்த நிலையில் 6.3 சதவீத வளர்ச்சி விகிதத்தை வரவேற்ற மன்மோகன் சிங், இந்த முன்னேற்றத்தை வைத்து பொருளாதார முன்னேற்றம் மீட்டெடுக்கப்பட்டுள்ளது என்ற முடிவுக்கு அவ்வளவு சீக்கிரத்தில் வந்துவிட முடியாது என்று எச்சரித்தார். 

மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதத்தின் ஒவ்வொரு சதவீத இழப்புக்கும் ஆண்டுக்கு 1.5 லட்சம் கோடி ரூபாய்க்கு செலவாகிறது. இந்த இழப்பினால் வேலைகள் வாய்ப்புகள் இன்றி இளைஞர்களும், தொழிலதிபர்களும் ஏமாற்றத்திற்கு ஆளாகியுள்ளனர். 

விவசாயிகள் மற்றும் கட்டுமான துறைகளில் ஏற்பட்ட வீழ்ச்சியை, அரசாங்கத்தின் செலவினங்களை திட்டங்களில் முன்னிலைப்படுத்திய போதிலும், "நமது நிதி பற்றாக்குறை மொத்தம் 546,432 கோடி ரூபாயில் மொத்தம் 96.1 சதவீதம் அதிகரித்துள்ளது. 

கட்டுமானத்தின் மீதான தனியார் செலவுகள் மிகவும் மோசமாக உள்ளது. அதாவது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி பற்றிய கணிசமான நிச்சயமற்ற தன்மை இன்னும் இருந்து வருகிறது. ரிசர்வ் வங்கி 2017-19-இல் வளர்ச்சி 6.7 சதவீதமாக இருக்கும் என்று கணித்துள்ளது. 2017-18-இல் 6.7 சதவீதத்தில், மோடி அரசின் நான்கு ஆண்டு சராசரி வளர்ச்சி விகிதம் 7.1 சதவீதமாக இருக்கும்.

"ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் 10 ஆண்டின் சராசரிக்கு சமமான அளவில், பொருளாதாரம் ஐந்து ஆண்டில் 10.6 சதவிகிதம் வளர வேண்டும், இது நடந்திருந்தால் நான் மகிழ்ச்சி அடைந்திருப்பேன், ஆனால் அதை நான் வெளிப்படையாக விரும்பவில்லை" என்றார்.

மேலும் இந்த அறிக்கை நாட்டின் 30 சதவீத வளரச்சியை கொண்ட முறைசாரா துறைகள், சிறு மற்றும் நடுத்தர தொழில்துறைகளின் தாக்கத்தை கணக்கில் கொள்ளவில்லை, மேலும் விவசாயத்துறை வளர்ச்சி 2.3 சதவீதத்தில் இருந்து 1.7 சதவதமாக குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலாண்டில் 4.1 சதவீதமாக இருந்தது'' என கூறியுள்ளார்.

பணமதிப்பிழப்பு திட்டத்தினால் ஜிடிபி வளர்ச்சி மிகவும் குறைந்துவிட்டது. இதனால் வேலைவாய்ப்பு குறைந்து கொண்டே செல்கிறது. மக்களின் தொழில்கள் நலிவடைந்தன. மேலும் புதியதாக தொழில் தொடங்குபவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இவ்வாறு மோடியின் ஆட்சியை மன்மோகன் சிங் தாக்கி பேசியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com