ஆர்.கே.நகரில் களமிறங்குகிறார் நடிகர் விஷால்: திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக வேட்பாளராக நடிகர் விஷால் போட்டியிடுவதற்கான அதிகாரப்பூர்வமான தகவலை தற்போது விஷால்
ஆர்.கே.நகரில் களமிறங்குகிறார் நடிகர் விஷால்: திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல்

சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக வேட்பாளராக நடிகர் விஷால் போட்டியிடுவதற்கான அதிகாரப்பூர்வமான தகவலை தற்போது விஷால் வெளியிட்டுள்ளார்.  

முதல்வர் ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு காலியான ஆர்.கே.நகர் சட்டப் பேரவைத் தொகுதிக்கு கடந்த மார்ச்சில் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் மதுசூதனன் போட்டியிட்டார். இந்தத் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இரட்டை விளக்குக் கம்பம் சின்னத்தில் மதுசூதனன் போட்டியிட்டார். 

இப்போது, அணிகள் இணைந்துள்ள சூழ்நிலையில் இரட்டை இலை சின்னமும் அதிமுகவுக்கு அளிக்கப்பட்டுள்ளது. அமைச்சர்களின் பிரசாரம், இரட்டை இலை சின்னம், மதுசூதனனுக்கு தொகுதியில் இருக்கும் செல்வாக்கு போன்றவை அதிமுகவுக்கு வெற்றிக்கு மிகப்பெரிய சாதகமான காரணிகளாகும். 

ஆர்.கே.நகர் தொகுதிக்கு வருகின்ற 21-ஆம் தேதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடக்கிறது. 

ஆர்.கே.நகரில் அதிமுக சார்பில் மதுசூதனன், திமுக சார்பில் மருதுகணேஷ், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலைக்கோட்டுதயம், சசிகலா அணி சார்பில் சுயாட்சையாக டிடிவி. தினகரனும் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். 

காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவை திமுக வேட்பாளர் மருதுகணேஷ்க்கு ஆதரவு தெரிவித்துள்ளது.  தேமுதிக, பாமக கட்சிகள் இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.

இந்நிலையில், பாஜக சார்பில் பாஜக சார்பில் கரு.நாகராஜன் போட்டியிடுவார் என இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை சார்பில் ஜெ.தீபா வருகிற 4-ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்யப்போவதாக அறிவித்துள்ளார். 

இந்நிலையில், ஆர்.கே.நகரில் நடிகர் சங்க பொதுச்செயலாளர் மற்றும் தயாரிப்பாளர் சங்க தலைவரும் நடிகருமான விஷால் சுயேட்சையாக போட்டியிட உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவலை இன்று விஷால் வெளியிட்டுள்ளார். வரும் திங்கள்கிழமை வேட்புமனுத்தாக்கல் செய்ய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல நடிகர்களான ரஜினி, கமல்ஹாசன் ஆகியோர் நேரடி அரசியலில் களமிறங்கி இருக்கும் நிலையில், அடுத்ததாக விஷாலின் இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.  

இதையடுத்து ஆர்.கே.நகர் தேர்தலில் பிரசாரங்கள் மேலும் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் சங்கத் தேர்தலில் பொதுச்செயலாளர், தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் என இரண்டு பதவிகளுக்கும் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கும் விஷால், அரசியலில் வெற்றி பெற்று பேரவைக்கு செல்வாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com