மதத்தின் பெயரால் மக்களை பிளவு படுத்த முயற்சிக்கிறது காங்கிரஸ்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

சாதி மற்றும் மதத்தின் பெயரால் நாட்டு மக்களை பிளவு படுத்த காங்கிரஸ் கட்சி முயற்சிப்பதாக பிரதமா் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
மதத்தின் பெயரால் மக்களை பிளவு படுத்த முயற்சிக்கிறது காங்கிரஸ்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

சாதி மற்றும் மதத்தின் பெயரால் நாட்டு மக்களை பிளவு படுத்த காங்கிரஸ் கட்சி முயற்சிப்பதாக பிரதமா் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

182 உறுப்பினர்கள் கொண்ட குஜராத் மாநில சட்டப்பேரவைக்கு இரண்டு கட்டங்களாக வருகின்ற 9 மற்றும் 14-ஆம் தேதிகள் தோ்தல் நடைபெற உள்ளது. டிசம்பர் 18-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்றும் நாளையும் 30-க்கும் மேற்பட்ட பொதுகூட்டங்களில் பங்கேற்று பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார். 

இன்று காலை குஜராத் மாநிலத்திற்கு வந்த மோடி, கட்ச் மற்றும் பரூச் மாவட்டங்களில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டங்களில் பங்கேற்று பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி பேசினார்.

பரூச் மாவட்டத்தில் நடைபெற்ற இரு தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய மோடி, காங்கிரஸ் கட்சியின் நோக்கம் என்ன? என்பது குஜராத் மக்களுக்கு தெரியும். காங்கிரஸ் கட்சி குஜராத் வளர்ச்சிக்காக எதையுமே செய்ததில்லை என்று கூறிய பிரதமர் மோடி, நர்மதா அணையைக் கட்ட கடைசிவரை முயற்சிக்கவில்லை என சாடினார்.

நாட்டு மக்களை சாதி மற்றும் மதத்தின் பெயரால் பிளவுப்படுத்த காங்கிரஸ் கட்சி முயன்று வருவதாக குற்றம்சாட்டினார். 

மேலும் மக்களிடையே மத சண்டையை மூட்டிவிட்டு, அதில் குளிர்காய்வதே காங்கிரஸாரின் வாடிக்கை என்று கூறிய மோடி, ஒரு மதத்தை எதிர்த்து மற்ற மதத்தினர் தீவிரமாக சண்டையிட்டு அடித்துக் கொண்டு சாகலாம். ஆனால், காங்கிரஸ் பாலாடை சாப்பிட்டு கொண்டிருக்கும் என்றவர் சொந்தச் சகோதரர்களாக வாழும் மக்களிடையே பிரிவினை எனும் பெரும் சுவரை எழுப்ப காங்கிரஸ் முயற்சிப்பதாகவும் மோடி குற்றம்சாட்டினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com