முஸ்லீம் நாடுகளுக்கு தடை விவகாரம்: டிரம்ப் அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி

அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரியில் டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்றார். பின்னர் அமெரிக்காவில் நிகழும் வன்முறை சம்பவங்களை
முஸ்லீம் நாடுகளுக்கு தடை விவகாரம்: டிரம்ப் அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி

வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரியில் டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்றார். பின்னர் அமெரிக்காவில் நிகழும் வன்முறை சம்பவங்களை குறைக்கும் விதமாகவும் சர்வதேச அளவில் தீவிரவாதம் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பதற்காக முஸ்லீம் பெரும்பான்மை நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதிக்கும் வகையில் அதிபர் டிரம்ப் அதிரடி பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். 

அந்த வகையில், சத், ஈரான், லிபியா, சோமாலியா, சிரியா மற்றும் யேமன் ஆகிய 6 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ள டிரம்ப் தடை விதித்து கடந்த செப்டம்பரில் அறிவிப்பு வெளியிட்டார்.  இந்த நாடுகளில் பெருமளவில் முஸ்லிம் மக்கள் வசித்து வருகின்றனர்.  டிரம்பின் இந்த முடிவு முஸ்லிம் மக்களுக்கு எதிரானது என பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது.  எனினும் அவர் தனது முடிவை செயல்படுத்துவதில் தீவிரமுடன் இருந்துள்ளார்.

இதனை எதிர்த்து கீழ் நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டன. இதனை எதிர்த்து டிரம்ப் அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

உச்ச நீதிமன்றம், டிரம்ப் அரசின் உத்தரவை அமல்படுத்த அனுமதித்துள்ளது. இருப்பினும் இந்த விவகாரம் குறித்து அக்டோபர் மாதம் இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் கூறியது. 

இந்த வழக்கு இன்று மீண்டும் உச்சநீதிமன்றத்தில் 9 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. இதில் நீதிபதிகள் ரூத் பேடர் கின்ஸ்பர்க் மற்றும் சோனியா சோட்டோமேயர், டிரம்பின் கொள்கை முடிவை முழுயளவில் செயல்படுத்துவதற்கு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளனர். பெரும்பான்மையான நீதிபதிகளின் இந்த தீர்ப்பு டிரம்ப் அரசு நிர்வாகத்திற்கு கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com