குஜராத் மாநில சட்டப் பேரவை தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்தது

குஜராத் மாநில சட்டப் பேரவை தேர்தலுக்கான பிரசாரம் மாலை 5 மணியுடன் ஓய்ந்தது.  குஜராத் சட்டப் பேரவைக்கு முதல் கட்டமாக 89
குஜராத் மாநில சட்டப் பேரவை தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்தது

குஜராத் மாநில சட்டப் பேரவை தேர்தலுக்கான பிரசாரம் மாலை 5 மணியுடன் ஓய்ந்தது.  குஜராத் சட்டப் பேரவைக்கு முதல் கட்டமாக 89 தொகுதிகளுக்கு வரும் 9-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இரண்டாம் கட்டமாக 93 தொகுதிகளில் டிசம்பர் 14-ல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.  இந்த தேர்தலில் 

பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே பலத்த போட்டி நிலவுகிறது. படேல் சமூதாய இட ஒதுக்கீட்டுக்காக போராடி மக்கள் ஆதரவைப் பெற்ற ஹர்திக் படேலுடன் காங்கிரஸ் கட்சி கைகோர்த்திருப்பதால் பாஜகவுக்கு கடும் போட்டியாக காங்கிரஸ் உருவெடுத்துள்ளது.

பாஜக சார்பில் பிரதமர் மோடியும் காங்கிரஸ் தரப்பில் துணைத் தலைவர் ராகுலும் குஜராத்தில் சூறாவளிப் பிரசாரம் மேற்கொண்டனர். இந்நிலையில் இன்று மாலை 5 மணியுடன் பிரசாரம் ஓய்ந்தது. 

இந்நிலையில் ஆளும் பாஜகவுக்கும் எதிர்க்கட்சியான காங்கிரஸுக்கும் வெற்றி வாய்ப்பு சமஅளவில் காணப்படுவதாகவும் தற்போதைய நிலவரப்படி இரு கட்சிகளும் களத்தில் சம பலத்துடன் மோதுவதாக கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com