பாகிஸ்தானுக்கான பயணங்களை உடனடியாக நிறுத்துங்கள்: அமெரிக்க மக்களுக்கு அமெரிக்க வெளியுறவுதுறை எச்சரிக்கை!

பாகிஸ்தானுக்கு அத்தியாவசியமற்ற பயணம் செய்வதை தவிர்க்குமாறு தங்கள் நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
பாகிஸ்தானுக்கான பயணங்களை உடனடியாக நிறுத்துங்கள்: அமெரிக்க மக்களுக்கு அமெரிக்க வெளியுறவுதுறை எச்சரிக்கை!

வாஷிங்டன்: பாகிஸ்தானுக்கு அத்தியாவசியமற்ற பயணம் செய்வதை தவிர்க்குமாறு தங்கள் நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

பாகிஸ்தானுக்கு அத்தியாவசியமற்ற பயணங்கள் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று தங்கள் நாட்டு மக்களுக்கு அமெரிக்க அறிவுறுத்தியுள்ளது. 

வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பயங்கரவாதக் குழுக்கள் நாடெங்கிலும் இருந்தும் அச்சுறுத்தல்கள், பிரிவினைவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ள நிலையில் அமெரிக்க இந்த அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது. முன்னதாக கடந்த மே 22  ஆம் தேதியும் இதேபோன்று அமெரிக்கா தங்கள் நாட்டு சுற்றுலாப்பயணிகளுக்கு பயண எச்சரிக்கை விடுத்து இருந்தது.

7 மாத இடைவெளிக்குப் பிறகு தற்போது, அமெரிக்கத் குடிமக்கள் தெற்காசிய நாட்டிற்கு தேவையான அனைத்து அத்தியாவசியமற்ற  பயணங்களுக்கும் எதிரான எச்சரிக்கையை அமெரிக்க வெளியுறவுதுறை வெளியிட்டுள்ளது. 

பாக்கிஸ்தான் தொடர்ச்சியான பயங்கரவாத வன்முறைகளை அனுபவித்து வருகிறது. பாகிஸ்தானில் அரசு ஊழியர்கள், மனிதாபிமான நடவடிக்கையில் ஈடுபடும் அரசு சாரா அமைப்பு நிறுவன ஊழியர்கள் (என்ஜீஓ), மூத்த பழங்குடியினர்கள், சட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆகியோரை குறிவைத்து பாகிஸ்தானில் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தப்படுவதகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பாகிஸ்தான் முழுவதும், வெளிநாடு மற்றும் தன்னிச்சையான பயங்கரவாத இயக்கங்கள் அமெரிக்க மக்களுக்கு எதிராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதே போன்றதொரு எச்சரிக்கையை தங்கள் நாட்டு மக்களுக்கு நேற்று வெள்ளிக்கிழமை விடுத்திருந்தது. 

அதில், பாகிஸ்தானில் சீனர்கள் மற்றும் சீன நிறுவனங்களுக்கு எதிராக தாக்குதலை நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டு உள்ளனர். சீனர்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும், எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும், வெளியே செல்வதையும், கூட்டம் நிறைந்த பகுதிக்கு செல்வதையும் சீனர்கள் தவிர்க்க வேண்டும் என்று சீன தூதரகம் தனது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com