திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 21 முதல் விஐபி தரிசனம் ரத்து

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் விஐபி தரிசனம் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. 
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 21 முதல் விஐபி தரிசனம் ரத்து

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் விஐபி தரிசனம் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் விஐபி தரிசனத்தை வரும் 23-ஆம் தேதி முதல் ஜனவரி முதல் வாரம் வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு என தொடர் விடுமுறைகள் வருவதால் விஐபி தரிசனம் ரத்துசெய்யப்படுகிறது என்று திருப்பதி தேவஸ்தான இணைச்செயல் அலுவலர் ஸ்ரீநிவாச ராஜூ தெரிவித்துள்ளார்.

மேலும் விடுமுறை தினங்களில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் அதற்கு ஏற்ப லட்டு செய்வதற்கு இயந்திரங்களை பயன்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.

ஜனவரி 2018 முதல் ஆதார் இருந்தால் மட்டுமே விஐபி தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படும் என்று அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com