கன்னியாகுமரி மாவட்டத்தில் 601 மீனவர்களை கரை திரும்பவில்லை: ஆட்சியர் சஜ்ஜன்சிங் சவான்

கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தம் 601 மீனவர்கள் கரை திரும்பவில்லை என மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் சவான் தெரிவித்துள்ளார். 
கன்னியாகுமரி மாவட்டத்தில் 601 மீனவர்களை கரை திரும்பவில்லை: ஆட்சியர் சஜ்ஜன்சிங் சவான்

 
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தம் 601 மீனவர்கள் கரை திரும்பவில்லை என மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் சவான் தெரிவித்துள்ளார். 

கன்னியாகுமரி மாவட்ட  ஆட்சியர் சஜ்ஜன்சிங் சவான் இன்று மாயமான மீனவர்களின் குடும்பங்களுக்கு இன்று நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தம் 601 மீனவர்கள் கரை திரும்பவில்லை. 13 பைபர் படகில் சென்ற 33 பேரையும், விசைப்படகில் சென்ற 588 மீனவர்களையும் காணவில்லை. மீனவர்களை தேடும் பணியில் விமானப்படை மற்றும் கப்பல் படை தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. 

தற்போது பாதிக்கப்பட்ட 32 ஆயிரம் மீனவர் குடும்பங்களுக்கு தலா ரூ.3,500 நிவாரண உதவி வழங்கப்படுகிறது. இந்த நிவாரண உதவித் தொகை 3 நாட்களுக்குள் வங்கிக் கணக்கில் ஒப்படைக்கப்படும். மேலும் உயிரிழந்த மீனவர்களுக்கான இறப்பு சான்றிதழ் 3 மாதங்களுக்குள் வழங்கப்படும். காவல்துறையினர் மீனவ கிராமங்களுக்கு நேரில் வந்து முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்) பதிவு செய்வார்கள் என்று ஆட்சியர் சஜ்ஜன்சிங் சவான் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com