பாகிஸ்தான் தூதரை மூத்த தலைவர்கள் சந்திக்கவில்லை: மோடிக்கு காங்கிரஸ் பதில்

குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் பாகிஸ்தான் தலையிட முயற்சிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ள நிலையில், இந்த குற்றச்சாட்டு
பாகிஸ்தான் தூதரை மூத்த தலைவர்கள் சந்திக்கவில்லை: மோடிக்கு காங்கிரஸ் பதில்

புதுதில்லி: குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் பாகிஸ்தான் தலையிட முயற்சிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ள நிலையில், இந்த குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது என காங்கிரஸ் மறுப்புத் தெரிவித்துள்ளது. 

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள பலன்பூர் என்னுமிடத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அப்போது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மணிசங்கர் அய்யர், தன்னை நீசன் எனக் குறிப்பிட்ட ஒரு நாளுக்கு முன், தில்லியில் உள்ள அவரது வீட்டில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும், பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவு அமைச்சரும் 3 மணி நேரம் சந்தித்துப் பேசியதாகத் தெரிவித்தார்.

அதற்கு அடுத்த நாள் மணிசங்கர் அய்யர் தன்னை நீசன் என்று விமர்சித்தாக அவர் குறிப்பிட்டார். பாகிஸ்தான் தூதரை மணிசங்கர் அய்யர் பலமுறை ரகசியமாகச் சந்தித்துப் பேசியுள்ளதாகவும் பிரதமர் மோடி குற்றஞ்சாட்டினார். 

அகமது பட்டேலை குஜராத்தின் முதல்வராக்க வேண்டும் எனப் பாகிஸ்தான் ராணுவத்தின் முன்னாள் தலைமை இயக்குநர் கூற வேண்டிய காரணம் என்ன என்றும் பிரதமர் மோடி கேள்வி எழுப்பினார். இந்த நிகழ்வுகளை எல்லாம் பார்க்கும் போது சந்தேகம் எழாமல் இருக்குமா? என்று மோடி கேள்வி எழுப்பினார். இது தொடர்பாக, நாட்டு மக்களுக்கு காங்கிரஸ் கட்சி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இந்நிலையில், பிரதமர் மோடியின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது என்று காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜிவாலா தெரிவித்துள்ளார். 

குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் தோல்வியை மறைக்கவே பிரதமர் இவ்வாறு குற்றம் சாட்டுவதாகவும், பாகிஸ்தானை நேசிப்பது யார்? பிரிவினைவாதிகளுக்கு பாதுகாப்பு அளிப்பது யார்? என்பதை நாடே அறியும். 

பாகிஸ்தான் தொடர்பான பிரச்சினைகளை மையப்படுத்தி குஜராத் தேர்தலில் போட்டியிட திட்டமிட்டால், விளைவுகளை ஏற்படுத்தும். பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ அமைப்பை நம்பினார்? பதான்கோட் விமானப்படைத் தளத்தை பாகிஸ்தான் குழு பார்வையிட மோடி அரசு அனுமதியளித்தது ஏன்?, தாவூத் இப்ராகிமுடன் தொடர்பு கொண்ட மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் ஏக்நாத் காட்சேவை பாஜகவில் இருந்து நீக்கிய பிறகு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பியவர் இதற்கெல்லாம் 
குஜராத் மக்களிடம் பதில் அளிக்க வேண்டும் என்று சுர்ஜிவாலா கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com