இந்திய பாதுகாப்பு துறை வேகமாக வளர்ந்து வருகிறது: பிரதமர் நரேந்திர மோடி

ஐஎன்எஸ் கல்வாரி நீர்மூழ்கி கப்பல் இன்று (வியாழன்)  முறைப்படி கடற்படையில் இணைந்தது. மும்பையில் இன்று நடந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு
இந்திய பாதுகாப்பு துறை வேகமாக வளர்ந்து வருகிறது: பிரதமர் நரேந்திர மோடி

மும்பை:  ஐஎன்எஸ் கல்வாரி நீர்மூழ்கி கப்பல் இன்று (வியாழன்)  முறைப்படி கடற்படையில் இணைந்தது. மும்பையில் இன்று நடந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த விழாவில் பேசும் போது 

இந்தியா-பிரான்ஸ் இடையிலான உறவு வேகமாக வளர்ந்து வருகிறது என்பதற்கு இது மிகச்சிறந்த உதாரணமாகும் என்று குறிப்பிட்டார். மேலும்  

இது இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் நேரம். மேக் இன் இந்தியா திட்டத்திற்கு மிகச்சிறந்த உதாரணம். எந்த சவாலையும் சந்திக்க இந்தியா தயாராக உள்ளது. நமது பாதுகாப்பு படையினர் தயாராக உள்ளனர். இந்திய பாதுகாப்பு துறை வேகமாக வளர்ந்து வருகிறது. பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் இந்தியா தனது கடமையை செய்ய தயாராக உள்ளது என்று கூறியுள்ளார். 

இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்புதுறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், மகாராஷ்டிர மாநில ஆளுநர் வித்யாசாகர்ராவ், முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் கடற்படை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com