காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியனின் உடலுக்கு முதல்வர் பழனிச்சாமி அஞ்சலி 

ராஜஸ்தானில் கொள்ளையர்களை பிடிக்கும் போது வீர மரணம் அடைந்த காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியனின் உடலுக்கு முதல்வர் பழனிச்சாமி அஞ்சலி செலுத்தினார்.
காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியனின் உடலுக்கு முதல்வர் பழனிச்சாமி அஞ்சலி 

ராஜஸ்தானில் கொள்ளையர்களை பிடிக்கும் போது வீர மரணம் அடைந்த காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியனின் உடலுக்கு முதல்வர் பழனிச்சாமி அஞ்சலி செலுத்தினார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், தலைமைச் செயலர், உள்துறை செயலர் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.

உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த அனைவரும் கறுப்பு பேட்ஜூடன் அணிந்திருந்தனர். சென்னை காவல் ஆணையர் மற்றும் உயரதிகாரிகளும் அஞ்சலி செலுத்தினர். எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பெரிய பாண்டியன் உடலுக்கு காவல்துறை சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் 

அவரது உடலுக்கு மற்ற அரசியல் கட்சியினர் மற்றும் ஓய்வுபெற்ற காவலர்கள் அஞ்சலி செலுத்தவுள்ளனர். இன்று மாலை 6 மணி வரை பெரியபாண்டியின் உடல் சென்னை விமான நிலையத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதைத்தொடர்ந்து மாலை 6 மணிக்குப் பிறகு அவரது உடல் விமானம் மூலம் மதுரைக்கு கொண்டு செல்லப்படுகிறது. பின்னர் மதுரையில் இருந்து சாலைமார்க்கமாக சொந்த ஊரான மூவிருந்தாளி சாலைப்புதூர் கிராமத்திற்கு எடுத்து செல்லப்பட்டு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com