குஜராத் சட்டப்பேரவை தேர்தல்: 11 மணி நிலவரப்படி 19% வாக்குகள் பதிவு

குஜராத் சட்டப்பேரவை தேர்தல்: 11 மணி நிலவரப்படி 19% வாக்குகள் பதிவாகியுள்ளது . 
vote
vote

குஜராத் சட்டப்பேரவை தேர்தல்: 11 மணி நிலவரப்படி 19% வாக்குகள் பதிவாகியுள்ளது . 

குஜராத் சட்டப் பேரவைக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடக்கிறது. மொத்தம் 93 தொகுதிகளில் நடைபெறும் இத்தேர்தலுக்காக 25,558 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 

இதில் மொத்தம் 851 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அவர்களில் பெண்கள் 69 பேர்.
இரண்டு கட்டங்களிலும் பதிவான வாக்குகள் அனைத்தும் 18-ஆம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும். 

2-வது கட்டமாக 93 தொகுதிகளில் காலை 8 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. காலை 11 மணிவரை 19 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com