திருச்செந்தூர் முருகன் கோயிலில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தவருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்: முதல்வர் அறிவிப்பு

திருச்செந்தூர் முருகன் கோயிலில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தவருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் எனறு முதல்வர் பழனிசாமி
திருச்செந்தூர் முருகன் கோயிலில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தவருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்: முதல்வர் அறிவிப்பு

திருச்செந்தூர் முருகன் கோயிலில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தவருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் எனறு முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும் காயமடைந்த 2 பேருக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். 

திருச்செந்தூர் முருகன் கோயிலில் பிரகார மண்டபம் இடிந்து விழுந்து பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வள்ளி குகை அருகே இடிந்த மண்டபத்தில் மேலும் பலர் சிக்கி இருக்கலாம் என தகவல் தெரிவிக்கின்றன. வள்ளி குகை அருகே உள்ள பிரகார மண்டபத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

பிரகாரம் இடிந்ததால் கோயிலில் நடைபெறவிருந்த அனைத்து பூஜைகளும் நிறுத்தப்பட்டுள்ளது. கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதியும் மறுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து போலீஸார் பொதுமக்களை கோயிலில் உள்ளே அனுமதிக்கத் தடை விதித்துள்ளனர்.  தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் திருச்செந்தூர் விரைந்துள்ளார். 

இந்நிலையில் திருச்செந்தூர் முருகன் கோயிலில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தவருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் எனறு முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும் காயமடைந்த 2 பேருக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com