சுதந்திர இந்தியாவில் 71 ஆண்டுகளாக மின்சார வசதியே இல்லாத கிராமம் திடீரென மின் இணைப்பு பெற்றுள்ள அதிசயம்!

சுதந்திர இந்தியாவில் 71 ஆண்டுகளாக மின்சார வசதியே இல்லாத கிராமம் திடீரென மின் இணைப்பு பெற்றுள்ள அதிசயம்!

சுதந்திர இந்தியாவில் 71 ஆண்டுளாக மின்சார வசதியே இல்லாமல் இருந்து வந்த அந்த கிராம மக்களுக்கு முதல்முறையாக மின் இணைப்பு

சத்தீஸ்கர்: சுதந்திர இந்தியாவில் 71 ஆண்டுளாக மின்சார வசதியே இல்லாமல் இருந்து வந்த அந்த கிராம மக்களுக்கு முதல்முறையாக மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம் பல்ராம்பூர் மாவட்டத்தில் ஜோகாபாத் என்ற மலை கிராமம் உள்ளது. காடுகளால் சூழப்பட்டுள்ள இந்த கிராமம் 1947 -ஆம் ஆண்டு முதல் கடந்த 71 ஆண்டுகளாக சூரிய ஆஸ்மனத்திற்குப் பிறகு மின்சாரம் வசதி இல்லாமல் இருளில் மூழ்கடிக்கப்பட்டது.  

இந்நிலையில், இந்த கிராமத்திற்கு முதல் முறையாக மின்சார இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. தெருக்கள் மற்றும் வீடுகளில் மின் விளக்குகள் எரிவதை கண்ட கிராமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  

இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், இந்தியா சுதந்திரம் பெற்ற 71 ஆண்டுகளை கடந்து வரும் நிலையில், முதல் முறையாக, தற்போது எங்கள் கிராமத்திற்கு மின்சாரம் கிடைத்துள்ளது. நாங்கள் மிகவும் சந்தோஷமாக உள்ளோம். இனிமேல் எங்கள் குழந்தைகள் எந்த சிரமும் இன்றி நன்கு படித்து வாழ்கையில் முன்னேற்றம் அடைவார்கள் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

மலைகள் மற்றும் காடுகளால் சூழப்பட்ட ஜோக்கபத் கிராமம். 70 ஆண்டுகளுக்குப் பிறகு மின்சாரம் வசதி பெற்றுள்ளது, "என்று தலைமை நிர்வாக அதிகாரி எம்.எஸ். மார்கம் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com