வாட்ஸ் ஆப் ஆடியோ மூலம் வாக்கு கேட்கும் மு.க.ஸ்டாலின்

இடைத்தேர்தல் நடைபெறவுள்ள ஆர்.கே. நகர் வாக்காளர்களிடம் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வாட்ஸ் ஆப் மூலம் வாக்கு சேகரித்து
வாட்ஸ் ஆப் ஆடியோ மூலம் வாக்கு கேட்கும் மு.க.ஸ்டாலின்

சென்னை: இடைத்தேர்தல் நடைபெறவுள்ள ஆர்.கே. நகர் வாக்காளர்களிடம் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வாட்ஸ் ஆப் மூலம் வாக்கு சேகரித்து வருகிறார். 

ஆர்கே நகர் தொகுதிக்கு வரும் 21-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுக, திமுக, பாஜக, நாம் தமிழர், தினகரன் அணி ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன. தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ளநிலையில், தொகுதியில் அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், அதிமுக சார்பில் வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் என பிரசாரம் செய்து வருகின்றனர். 

திமுக வேட்பாளர் மருதுகணேஷை ஆதரித்து திமுக நிர்வாகிகள் பிரசாரம் செய்து வருகின்றனர். இன்று முதல் 3 நாட்களுக்கு செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தீவிர பிரசாரம் மேற்கொள்கிறார். 

இதனிடையே திமுக செயல்தலைவர் ஸ்டாலின் வாட்ஸ் ஆப் மூலம் வாக்கு சேகரிக்கும் ஆடியோ வைரலாகி வருகிறது. அதில், அன்பார்ந்த ஆர்கே நகர் தொகுதி வாக்காளர்களே, உங்களில் ஒருவரான முக ஸ்டாலின் விடுக்கும் அன்பு வேண்டுகோள், அனைத்து நிலைகளிலும் தமிழகத்தை கடைசி இடத்துக்கு தள்ளி, லஞ்ச, ஊழலை மட்டும் முதலிடத்துக்கு கொண்டு வந்திருக்கும் குதிரை பேர அதிமுக அரசை விரைந்து மாற்றுவதற்காக ஒரு தொடக்கப்புள்ளியாக இந்த இடைத்தேர்தல் களம் இருக்கட்டும். எப்போதும் உங்களுடன் இருக்கும் திமுக வேட்பாளர் மருதுகணேஷுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள். நன்றி. வணக்கம் என்று அந்த ஆடியோவில் உள்ளது. 

இடைத்தேர்தல் நடைபெறவுள்ள ஆர்.கே. நகர் தொகுதியில் ரூ.100 கோடி வரை பணப்பட்டுவாடா நடந்துள்ளதாகவும், தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தும் அவர்கள் கண்டும் காணாமல் இருந்து வருகின்றனர்.  ஆளும்கட்சிக்கு தேர்தல் அதிகாரிகளும், காவல் துறையும் திட்டமிட்டு உடந்தையாக உள்ளனர் என ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com