குஜராத், ஹிமாசலில் வாக்கு எண்ணிக்கை: யாகம் வளர்க்கும் காங்கிரஸ் 

குஜராத் மற்றும் ஹிமாச்சல் பிரதேசம் சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு எண்ணிக்கை துவங்கியுள்ள நிலையில், பாதுகாப்பு பணியில் போலீஸார்
குஜராத், ஹிமாசலில் வாக்கு எண்ணிக்கை: யாகம் வளர்க்கும் காங்கிரஸ் 

குஜராத் மற்றும் ஹிமாச்சல் பிரதேசம் சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு எண்ணிக்கை துவங்கியுள்ள நிலையில், பாதுகாப்பு பணியில் போலீஸார் முடுக்கி விடப்பட்டுள்ளனர்.

குஜராத், ஹிமாசலப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று திங்கள்கிழமை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

குஜராத், பிரதமர் மோடியின் சொந்த மாநிலம் என்பதால் அந்த மாநில தேர்தல் முடிவு பெரும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்படுகிறது. இரு மாநிலங்களிலும் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக பல்வேறு வாக்குக் கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன. இரு மாநிலங்களிலுமே பாஜக-காங்கிரஸ் இடையே நேரடிப் போட்டி நிலவியது. குஜராத்தில் பாஜகவும், ஹிமாசலப் பிரதேசத்தில் காங்கிரஸூம் இப்போது ஆட்சியில் உள்ளன.

முன்னதாக, 182 தொகுதிகள் கொண்ட குஜராத்தில் கடந்த 9 மற்றும் 14-ஆம் தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. ஹிமாசலப் பிரதேசத்தில் கடந்த நவம்பர் 9-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.

தேர்தலை முன்னிட்ட நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகளும், இரு கட்சிகளுக்கம் வலுசேர்ப்பதாகவே அமைந்ததால், பெரும்பாண்மை வெற்றி அமையுமா என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.

அதே நேரத்தில், காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து சோனியா ஒய்வு பெறுவதாக தேர்தலுக்கு முன்பே தகவல் பரவியதால், காங்கிரசின் பலம் முன்பு போல் உள்ளதாக என்ற கேள்விக்கான விடையும் தேர்தல் முடிவில் தான் உள்ளன.

இந்நிலையில், தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறுவதற்காக, தில்லியில் உள்ள ராகுல் காந்தி வீட்டின் முன்பு தொண்டர்கள் யாகம் வளர்த்தும், சிறப்பு பூஜைகளும் செய்து வருகின்றனர். யாகத்தில் ராகுல் மற்றும் சோனியா காந்தியின் புகைப்படங்களை வைத்து அவர்கள் யாகம் வளர்த்து வரும் காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com