நூல் இழையில் நூற்றுக்கணக்கான ரயில் பயணிகளை காப்பாற்றிய 5ம் வகுப்பு பள்ளி மாணவன்

தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டு உள்ளதை பார்த்த 5-ம் வகுப்பு மாணவன் தனது சட்டையை கழற்றி ரயிலை நிறுத்தியதால் நூற்றுகணக்கான
நூல் இழையில் நூற்றுக்கணக்கான ரயில் பயணிகளை காப்பாற்றிய 5ம் வகுப்பு பள்ளி மாணவன்

பாட்னா: தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டு உள்ளதை பார்த்த 5-ம் வகுப்பு மாணவன் தனது சட்டையை கழற்றி ரயிலை நிறுத்தியதால் நூற்றுகணக்கான ரயில் பயணிகள் உயிர் பிழைத்தனர். அதிகாரிகள் மாணவனின் இல்லத்திற்கு சென்று பாராட்டு தெரிவித்து பரிசு வழங்கி உள்ளனர்.

பிகார் மாநிலம் மேற்கு சம்பரன் மாவட்டத்தில் மங்கல்பூரை சேர்ந்த மாணவன் பீம் யாதவ்(12) அங்குள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான். பீம் யாதவ் நேற்று தனது பழதோட்டத்திற்கு சென்றுள்ளான். அப்போது கோரக்பூர்-நர்கட்டியாகாஞ்ச் இடையே உள்ள ரயில்வே தண்டவாளத்தை கடந்து சென்றபோது ரயில்வே தண்டவாளம் உடைந்து இருப்பதை பார்த்து பதற்றமடைந்த சிறுவன். 

அதே தண்டவாளத்தில் பயணிகள் ரயில் ஒன்று வருவதை பார்த்து சிறுவன் ரயிலை நோக்கி கையை காட்டி கத்தியுள்ளான். பின்னர் உடனடியாக தான் அணிந்திருந்த  சிகப்பு கலர் டி-சர்ட்டை கழட்டி கொடிபோன்று சுழற்றி சுழற்றி காட்டி ரயிலை நிறுத்துமாறு கத்தி உள்ளான். ஆனால் ரயில் ஓட்டுநருக்கு முதலில் என்னவென்று புரியவில்லை. பின்னர் ரயிலின் ஓட்டுநர் அவசரகால பிரேக்கை இழுத்து ரயிலை நிறுத்தி உள்ளார். பின்னர் ஒட்டுநர் இறங்கி வந்து தண்டவாளத்தை பார்த்த போது தான் தண்டவாளம் உடைந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். 

பின்னர் அந்த சிறுவனை அவர் பாராடினார் உடனடியாக இது குறித்து அவர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். சிறுவனின் அறிவிப்பூர்வமான நடவடிக்கையில்  ஏற்பட இருந்த மிகப்பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இதனால் நூற்றுகணக்கான பயணிகளின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. 

இது குறித்து மாவட்ட கல்வி அதிகாரி ஹரேந்திர ஜா கூறுகையில், ரயில் பயணிகளின் உயிர்களை காப்பாற்றிய மாணவனின் துணிச்சலான செயலை செய்தித்தாள்களில் படித்து தெரிந்துகொண்டேன். சிறுவனின் தைரியத்தை சக அதிகாரிகளோடு பகிர்ந்து கொண்டேன். சிறுவனனின் செயலுக்காக அவருக்கு வெகுமதி அளிக்கப் போகிறோம். வெகுமதி பணம் அல்லது மேற்கோள் வடிவில் இருக்கலாம். ஆனால் இன்னும் அதனை நாங்கள் தீர்மானிக்கவில்லை. ஆனால் நிச்சயம் வழங்குவோம் என கூறினார்.

இது குறித்து கிழக்கு மத்திய ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி ராஜேஷ் குமார் கூறுகையில், அந்த சிறுவனனின் செயலால் நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம், அவரது துணிச்சலான செயலுக்கு வணங்குகிறோம் என தெரிவித்துள்ளார்.

இது குறித்து உள்ளூர் ஊடகங்களிடம் சிறுவன் கூறுகையில், இந்த சமுதாயமும் என்னைப் பற்றி பேசும் வகையில் ஏதாவது செய்ய விரும்பினேன். இப்போது நான் பயணிகள் உயிர்களை காப்பாற்றியது மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com