ரயில் பயணத்தில் தவறிய தமிழக கோடீஸ்வரர் உத்தரப்பிரதேசத்தில் பிச்சை எடுத்தபோது மீட்பு

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ரயில் பயணத்தில் தவறிய தமிழக கோடீஸ்வரர் உத்தரப்பிரதேசத்தில் பிச்சை எடுத்தபோது ஆதார் அட்டை ஆவணங்களின்
ரயில் பயணத்தில் தவறிய தமிழக கோடீஸ்வரர் உத்தரப்பிரதேசத்தில் பிச்சை எடுத்தபோது மீட்பு

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ரயில் பயணத்தின் போது தவறிய தமிழக கோடீஸ்வரர் உத்தரப்பிரதேசத்தில் பிச்சை எடுத்தபோது ஆதார் அட்டை ஆவணங்களின் விவரங்கள் மூலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் குடும்பத்தினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

உத்தரப்பிரதேச மாநிலம் ராபரேலி மாவட்டத்தில் உள்ள ரால்பூர் நகரின் தெருக்களில் கடந்த சில நாட்களாக பிச்சைக்காரர் ஒருவர் சுற்றித் திரிந்துள்ளார். இது அங்குள்ள சுவாமி பாஸ்கர் ஸ்வரூப் ஜி மகாராஜ் கவனத்தை ஈர்த்துள்ளது. உடனடியாக அவரை வரவழைத்து, அவரது சகாக்களிடம் அனுப்பி குளிப்பதற்கு ஏற்பாடு செய்யச் சொல்லியுள்ளார். அப்போது, அந்த பிச்சைக்காரரின் துணியில் ஆதார் கார்டும், வங்கியில் ஒரு கோடி ரூபாய் டெபாசிட் செய்ததற்கான ஆவணங்களும் இருந்துள்ளன.

மொத்தம் ரூ. 1,06,92,731 கோடி அவரது பெயரில் வைப்புத் தொகையாக வங்கியில் செலுத்தப்பட்டு இருந்தது தெரிய வந்தது. அவரது ஆதார் கார்டை வைத்து அவர்கள் பார்க்கும்போது, அவர் பிச்சைக்காரர் அல்ல என்பதும், தமிழகத்தில் இருந்து வந்த கோடீஸ்வரர் என்பதும் அறிந்தவுடன் அதிர்ந்து போயினர்.

ஆதார் கார்டில் உள்ள விவரங்களை வைத்து மேலும் நடத்திய விசாரணையில், அவர் தமிழ்நாட்டில் இருந்து வந்த பணக்காரர் என்பது தெரியவந்துள்ளது. மேலும் ஆதார் விவரங்களை வைத்து அவரது குடும்பத்தினருக்கு சுவாமி தகவல் கொடுத்தார். இதையடுத்து அவரது பெண் கீதா ரால்பூருக்கு வந்து தனது தந்தையை அழைத்து சென்றுள்ளார்.

இதுகுறித்து சுவாமி பாஸ்கரிடம் செய்தியாளர்களிடம் கூறுகையில், கடந்த 13 ஆம் தேதி முதல் பள்ளி வளாகத்திற்கு அருகே அவரைப் பார்த்து வந்தேன். சாப்பிடுவதற்கு ஏதாவது கிடைக்குமா? என்று தேடிக் கொண்டு இருந்தார். அவரை அழைத்து வந்து, குளிக்க வைத்து, ஆடை கொடுத்து, உணவு வழங்கப்பட்டது. அப்போது அவரிடம் இருந்த ஆதார் கார்டை பார்க்கும்போது அவர் தமிழத்தில், திருநெல்வேலி நகரத்தை சேர்ந்த முத்தையா நாடார் என்பது தெரிய வந்தது. அவரது குடும்பத்தினருடன் தொடர்பு கொண்டு விசாரித்தபோது ஆதாரில் உள்ள விவரங்கள் அனைத்தும் சரியாக இருந்தது. இதையடுத்து முத்தையா நாடாரின் மகள் கீதா வந்து அவரை அழைத்துச் சென்றுள்ளதாக கூறினார். 

தனது தந்தையை அழைத்து செல்லும்போது சுவாமிக்கு கீதா நன்றி தெரிவித்தார்.

இதுகுறித்து முத்தையா மகள் கீதா கூறுகையில், 'எனது தந்தை ரயில் பயணத்தில் வழியை தவற விட்டு விட்டார், அவரை கடந்த ஆறு மாதங்களாக தேடி வருகிறோம். அவருக்கு உடல்நலத்துக்கு கொடுக்கப்பட்டு வந்த சில மருந்துகளால் அவர் நினைவுத்திறனை இழந்துவிட்டார் என்று தெரிவித்த கீதா,  எனது அப்பாவை கண்டுபிடித்து கொடுத்த சுவாமிஜிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com