இந்தியாவில் தொழில் உற்பத்தி மந்தம்; நெருக்கடியில் இந்திய வங்கிகள்: சர்வதேச நிதியம் எச்சரிக்கை 

இந்தியாவில் தொழில் உற்பத்தி மந்தமாகியுள்ள நிலையில் வங்கிகளின் வளர்ச்சியும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பொருளாதார வளர்ச்சியில் இந்தியா
இந்தியாவில் தொழில் உற்பத்தி மந்தம்; நெருக்கடியில் இந்திய வங்கிகள்: சர்வதேச நிதியம் எச்சரிக்கை 

இந்தியாவில் தொழில் உற்பத்தி மந்தமாகியுள்ள நிலையில் வங்கிகளின் வளர்ச்சியும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பொருளாதார வளர்ச்சியில் இந்தியா பெரும் சவாலை எதிர்கொண்டுள்ளதாகவும் சர்வதேச நிதியம் எச்சரித்துள்ளது.

ஐ.எம்.எஃப் எனப்படும் சர்வதேச நிதியத்தின் கூட்டத்தில் இந்தியாவின் நிதிநிலை குறித்து விவாதிக்கப்பட்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

அந்த அறிக்கையில், இந்தியாவில் தொழில் வளர்ச்சி குறைந்துள்ள நிலையில் வங்கிகளின் வளர்ச்சியும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வங்கிகளில் வேகமான வளர்ச்சிக்கு தடையாக ஏராளமான சொத்துகள் உள்ளதாகவும், மறுபுறம் பண சுழற்சிக்கு தேவையான நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் வங்கிகளின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனால் இந்தியாவின் நிதித்துறை பெரும் சவாலை எதிர்கொண்டுள்ளதாகவும், இந்தியா பொருளாதார வளர்ச்சியும் குறைந்து வருவதாகவும் அந்த அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது. 

தொழில் வளர்ச்சி குறைந்ததால் இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகள் நெருக்கடியான நிலைக்கு சென்றுள்ளதாக ஐ.எம்.எஃப் அறிக்கை எச்சரித்துள்ளது. இந்திய நிதி அமைப்பு ஒரு படிப்படியான கட்டமைப்பு மாற்றத்திற்கு உட்பட்டுள்ளது, வங்கிகளுக்கு இடையேயான மிகப்பெரிய பங்களிப்புடன், பெரிய நிறுவனங்களுக்கு சந்தை நிதியுதவிக்கு அதிகமான உதவிகளைக் கொண்டுள்ளது. இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதார உற்பத்தியில் நிதி அமைப்பு சொத்துக்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 136 சதவிகிதம் என்றும் 60 சதவிகிதம் வங்கிகளின் சொத்துக்கள் உள்ளடங்கி இருப்பதை சுட்டிக்காட்டியுள்ள ஐ.எம்.எஃப், தற்போது இந்த சொத்துக்களுக்கும் நெருக்கடி வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

மேம்படுத்தப்பட்ட சட்ட, ஒழுங்குமுறை மற்றும் மேற்பார்வை கட்டமைப்புகள் ஆகியவற்றின் மூலம் நிதித் துறை வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு, பல்வகைப்படுத்துதல், வணிக நோக்குநிலை மற்றும் தொழில்நுட்பங்கள் அதிகரித்துள்ளது. இருப்பினும் நிதித்துறை கணிசமான சவால்களை எதிர்கொள்கிறது, பொருளாதார வளர்ச்சி சமீபத்தில் குறைந்துள்ளது என தெரிவித்துள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com