தூய்மை இந்தியா திட்டத்துக்கு கார்பரேட் நிறுவனங்கள் ரூ.666 கோடி நன்கொடை

தூய்மை இந்தியா திட்டத்துக்கு 2014-ஆம் ஆண்டு முதல் கார்பரேட் நிறுவனங்களும், தனிநபர்களும் இதுவரை ரூ.666 கோடிக்கும் அதிமாக
தூய்மை இந்தியா திட்டத்துக்கு கார்பரேட் நிறுவனங்கள் ரூ.666 கோடி நன்கொடை

புதுதில்லி: தூய்மை இந்தியா திட்டத்துக்கு 2014-ஆம் ஆண்டு முதல் கார்பரேட் நிறுவனங்களும், தனிநபர்களும் இதுவரை ரூ.666 கோடிக்கும் அதிமாக நன்கொடை வழங்கியுள்ளதாக மத்திய அரசு சார்பில் மக்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மக்களவையில் கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த மத்திய குடிநீர் மற்றும் சுகாதாரத்துறை இணையமைச்சர் ரமேஷ் சந்தப்பா ஜிகஜினகி தெரிவிக்கையில், தூய்மை இந்தியா திட்டத்தை நிறைவேற்றும் விதத்தில் தனிநபர் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து சமூக பொறுப்புணர்வு நிதியாக கடந்த 2014-15-ஆம் ஆண்டில் ரூ.15,961.19 லட்சமும், 2015-16-ஆம் ஆண்டில் ரூ.25,324.64 லட்சமும், 2016-17-ஆம் ஆண்டில் ரூ.24,504.86 லட்சமும் பெறப்பட்டுள்ளது. 2017-18ஆம் ஆண்டில் இதுவரை ரூ.877.01 லட்சம் பெறப்பட்டுள்ளது. 

2014-ஆம் ஆண்டு முதல் இப்போது வரை வசூலான ரூ.666 கோடியிலிருந்து, ரூ.633.98 கோடி தூய்மை இந்தியா திட்டத்துக்கு செலவிடப்பட்டுள்ளதாக எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.

சுதேச பாரத் மிஷன் திட்டத்தின் கீழ் 500 லட்சம் கழிப்பறைகளை அரசு கட்டி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகள் வழங்கும் நிறுவனங்கள் பங்குதாரர்களாக இந்த திட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் என்று அமைச்சர் சுட்டிக்காட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com