ஆந்திராவில் கோவில்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை: அரசு அதிரடி உத்தரவு

'வரும், ஜனவரி 1 அன்று, கோவில்களில் புத்தாண்டு கொண்டாட்டங்கள், சிறப்பு பூஜைகள் நடத்தக் கூடாது' எனவும் அப்படி கொண்டாடுவது ஹிந்து மதத்தின்
ஆந்திராவில் கோவில்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை: அரசு அதிரடி உத்தரவு

'வரும், ஜனவரி 1 அன்று, கோவில்களில் புத்தாண்டு கொண்டாட்டங்கள், சிறப்பு பூஜைகள் நடத்தக் கூடாது' எனவும் அப்படி கொண்டாடுவது ஹிந்து மதத்தின் பாரம்பரியம் அல்ல என்று ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.

ஆண்டுதோறும் ஜனவரி முதல் நாள் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்படும்.

இந்நிலையில், ஆந்திராவில் உள்ள கோவில்களுக்கு, அம்மாநில ஹிந்து அறநிலையத் துறை வெள்ளிக்கிழமை ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. 

அதில் கூறப்பட்டுள்ளதாவது: வரும் 2018 ஜனவரி 1-ஆம் தேதியன்று வரும் ஆங்கிலப் புத்தாண்டை, கோவில்களில் கொண்டாடக் கூடாது. இது, நம் வேத சாஸ்திரத்துக்கு எதிரானது எனவும் அப்படி கொண்டாடுவது ஹிந்து மதத்தின் பாரம்பரியம் அல்ல. இந்த நாளில், கோவில்களில் சிறப்பு விளக்குகளாலும், பூக்களாலும் அலங்கரிப்பது, சிறப்பு பூஜைகள் போன்றவை நடைபெறக் கூடாது. தெலுங்கு புத்தாண்டு தினமான யுகாதியில் மட்டுமே சிறப்பு பூஜைகள் நடத்தப்பட வேண்டும் என அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

திருப்பதி திருமலை வெங்கடாஜலபதி கோவில், விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவில், ஸ்ரீசைலத்தில் உள்ள சிவாலயம் போன்ற புகழ்பெற்ற கோவில்களுக்கு இந்த உத்தரவு பொருந்துமா என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை.

உலகெங்கிலும் உள்ள தெலுங்கிற்கான புத்தாண்டு, உகாதி, அன்று கோவில்களில் திருவிழாக்களை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று ஹிந்து பாரம்பரியம் கூறுகிறது" எனவும் " மேற்கத்திய புத்தாண்டுகளில் இனிப்புகளை விநியோகிக்கக் கூடாது அல்லது கோவில்கள் அலங்கரிக்கப்படக்கூடாது." என அவுட்லுக் அறிவிப்பு மேற்கோளிட்டுள்ளது. 

புத்தாண்டு தினத்தன்று கோவில்களில் அலங்கரிக்கப்பட்டிருக்கும். அன்றைய தினம் ஹிந்து மரபின் படி, கோவில்களில் பல லட்சம் ரூபாய் நன்கொடையில் அலங்கரிக்கப்படுவதாக ஹிந்து தர்ம பரிரக்ஷண வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆந்திரா கோவில்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களை தடை செய்வது ஹிந்து மதம் பாரம்பரியம் அல்ல ஹிந்து அமைப்புகள் தெரிவித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com