பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா போர் தொடுக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தல்

பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா இப்போதே போர் தொடுக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர்களில் ஒருவம், மாநிலங்களவை உறுப்பினருமான
பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா போர் தொடுக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தல்

மும்பை: பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா இப்போதே போர் தொடுக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர்களில் ஒருவம், மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தியுள்ளார்.

பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக கூறி, இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ஜாதவை பார்க்க அவரது மனைவி மற்றும் தாயாருக்கு பாகிஸ்தான் அரசு அனுமதி வழங்கியது. அவரது தாயாரும் மனைவியும் இஸ்லாமாபாதில் உள்ள பாகிஸ்தான் வெளியுறவு அலுவலக அமைச்சகத்தில் சந்திக்க பாகிஸ்தான் அரசு அனுமதி வழங்கியது. இதையடுத்து கண்ணாடித் தடுப்புக்கு இடையே நேற்று முன்தினம் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினர்.

எனினும், இந்தச் சந்திப்பின்போது பாதுகாப்பு என்ற பெயரில் குல்பூஷண் ஜாதவின் மனைவியை தாலி, வளையல்கள், நெற்றிப்பொட்டு ஆகியவற்றை அகற்றுமாறு பாகிஸ்தான் அரசு நெருக்கடி கொடுத்தது தொடர்பான அதிர்ச்சித் தகவல் தற்போது வெளியாகியுள்ளதை அடுத்து, ஜாதவை அவரது குடும்பத்தார் சந்தித்தபோது அவர்களுக்கு பாகிஸ்தான் அவமரியாதை இழைத்ததாக இந்தியா குற்றம்சாட்டியுள்ளது.

இந்நிலையில், மும்பையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த சுப்பிரமணியன் சுவாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், மகாபாரதத்தில் திரவுபதியின் துகிலுரிந்த நடவடிக்கைக்கு என்ன பலன் கிடைத்ததோ, அதுபோல் ஜாதவின் தாயார் மற்றும் அவரது மனைவிக்கு நிகழ்ந்த அவமதிப்புக்கு பாகிஸ்தான் தண்டனை பெற வேண்டும். இந்த சம்பவம் துரதிர்ஷ்டமானது, இதை ஏற்க முடியாது. இந்தியாவில் உள்ள அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியதுடன், காயப்படுத்தியும் உள்ளது என்றார்.

மேலும், இனியும் பொறுத்திருக்காமல் பாகிஸ்தான் மீது இந்தியா இப்போது அவசியம் நடவடிக்கை எடுக்க வேண்டும். நிரந்தர தீர்வுக்கு பாகிஸ்தான் மீது இந்தியா இப்போது போர் தொடுத்து அதை நான்கு கூறாக்க வேன்டும். மேலும், இதற்கான நடவடிக்கைகளில் இந்தியா அரசு உடனடியாக ஈடுபட வேண்டும் என்றவர் இது என்னுடைய சொந்த கருத்தாகும், அது பெரும்பாலும் கட்சியின் கருத்தாகவும் இருக்கிறது என்றார். 

பாகிஸ்தான் நாட்டவருக்கு மனிதாபிமான விசாக்களை வழங்குவதை இந்திய வெளியுறவு அமைச்சகம் வழங்குவதை நிறுத்த வேண்டும் என்றும் கூறினார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com