முதல்வரின் நிவாரண நிதிக்கும் வரி விலக்கு: பட்ஜெட்டில் அறிவிப்பு 

பிரதமரின் நிவாரண நிதிக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் வரி விலக்கானது முதல்வர் மற்றும் துணைநில ஆளுநரின்
முதல்வரின் நிவாரண நிதிக்கும் வரி விலக்கு: பட்ஜெட்டில் அறிவிப்பு 

பிரதமரின் நிவாரண நிதிக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் வரி விலக்கானது முதல்வர் மற்றும் துணைநில ஆளுநரின் நிவாரண நிதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தனது பட்ஜெட் தாக்கலின்போது மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி பேசியதாவது: பிரதமரின் நிவாரண நிதிக்கு தற்போது வரி விலக்கு அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால், மாநில முதல்வர்கள் மற்றும் துணைநிலை ஆளுநர்களின் நிவாரண நிதிகளுக்கு அத்தகைய வரி விலக்கு அளிக்கப்படுவதில்லை.

பிரதமரின் நிவாரண நிதியின் பயன்பாடும், முதல்வர் மற்றும் துணைநிலை ஆளுநரின் நிவாரண நிதியின் பயன்பாடும் ஒன்றேயாகும். மக்களுக்காக வழங்கப்படும் இத்தகைய நிதிகளில் வரி பாரபட்சம் காட்டப்படுவது சரியல்ல.

எனவே, பிரதமரின் நிவாரண நிதியைப் போலவே முதல்வர் மற்றும் துணைநிலை ஆளுநரின் நிவாரண நிதிகளுக்கும் வரி விலக்கு அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதற்காக, வருமான வரிச் சட்டத்தில் விரைவில் திருத்தங்களை மேற்கொள்ளவும் அரசு திட்டமிட்டுள்ளது என்றார் அருண் ஜேட்லி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com