ஆடி ஏ4 35 டிடிஐ டீசல் வேடியண்ட்டை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் 

சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி தனது புதிய தலைமுறை ஆடி ஏ4 35 டிஐ டீசல் வேடியண்ட்டை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. 
ஆடி ஏ4 35 டிடிஐ டீசல் வேடியண்ட்டை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் 

சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி தனது புதிய தலைமுறை ஆடி ஏ4 35 டிஐ டீசல் வேடியண்ட்டை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. 

இந்த காரில் பொருத்தப்பட்டிருக்கும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் 190 பிஹச்பி சக்தியை வெளிப்படுத்தும் திறன்கொண்டதாகும். லிட்டருக்கு

18.25 கிமீ மைலேஜ்  தரக்கூடியது என்றும், இந்திய ஆட்டோமோடிவ் ஆராய்ச்சி அமைப்பினால் சான்றளிக்கப்பட்டுள்ளதாவும் தெரிகிறது.  முந்தைய தலைமுறை ஏ4 மாடலின் டிசைனை இதில் மெருகூட்டியிருக்கின்றனர்.

உட்புறத்தில் முன்பிருந்த கன்வென்ஷனல் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டருக்கு மாற்றாக, இரண்டு டிஸ்பிளே மோட் கொண்ட 12.3 இஞ்ச் திரையுடன் கூடிய இன்ஃபோடெய்ன்மெண்ட் சாதனம் பொருத்தப்பட்டுள்ளது.

ஆடியின் பிரத்யேக எம்எம்ஐ நேவிகேசன், வயர்லஸ் சார்ஜிங் போன்ற எண்ணற்ற சிறப்பம்சங்கள் இதில் உள்ளது. மெர்சிடஸ் பென்ஸ் சி கிளாஸ், பிஎம்டபிள்யூ 4 சீரீஸ் மற்றும் வால்வோ எஸ்60 ஆகிய மாடல்களுக்கு கடும் போட்டியாக புதிய ஆடி ஏ4 இருக்கும் என கருதப்படுகிறது.

இதன் எக்ஸ் ஷோரூம் விலை ரூ. 40.20 லட்சம்.  முன்னதாக இதன் பெட்ரோல் வேரியண்ட் கடந்த செப்டம்பர் 2016ல் அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com