இ-சேவை மையங்களில் ஆதார் அட்டை பிழை திருத்தங்களை மேற்கொள்ளலாம்

தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் இ-சேவை மையங்களில் ஆதார் அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள

காஞ்சிபுரம்: தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் இ-சேவை மையங்களில் ஆதார் அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களில் பிழை திருத்தங்கள் இருத்தால் திருத்திக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் இரா.கஜலட்சுமி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனம் சார்பில், தமிழகம் முழுவதும் அரசு இ-சேவை மையங்களை அமைத்து நிர்வகித்து வருகிறது. 

இந்த இ-சேவை மையங்களில். ஏற்கனவே ஆதார் எண், பெற்றுள்ளவர்கள் தங்களது ஆதார் அட்டையில் குறிப்பிட்டுள்ள விவரங்களில் பிழை திருத்தம் செய்யும் வசதி பிப்ரவரி 1 முதல் வழங்கப்பட்டு வருகிறது. 

எனவே. மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் செயல்பட்டு வரும் இ-சேவை மையங்களில் பொதுமக்கள் மேற்கண்ட மையங்களுக்கு நேரில் சென்று, தங்களது, ஆதார் எண்ணைத் தெரிவித்து கைரேகை அல்லது கருவிழியினைப் பதிவு செய்து தங்களது பெயர். பிறந்த தேதி. பாலினம். முகவரி, அலைபேசி எண். மின்னஞ்சல் முகவரி மற்றும் புகைப்படம் ஆகிய விவரங்களை மாற்றிக்கொள்ளலாம்.

இதற்கு சேவை கட்டணமாக ரூ. 25 வசூலிக்கப்படும். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com