மதுரையில் ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏவுக்கு உற்சாக வரவேற்பு

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ.வான எஸ்.எஸ். சரவணனுக்கு (மதுரை தெற்கு), மதுரையில்

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ.வான எஸ்.எஸ். சரவணனுக்கு (மதுரை தெற்கு), மதுரையில் வியாழக்கிழமை அவரது ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

 அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவு காரணமாக, அக்கட்சியின் பொதுச் செயலர் வி.கே. சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கூவத்தூரில் உள்ள விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அங்கிருந்து தப்பி வந்த சரவணன், எதிர்தரப்பைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தைச் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். கூவத்தூரில் இருந்து மாறுவேடத்தில் தப்பி வந்ததாகவும் அவர் கூறினார். 

 தமிழக முதல்வராக பொறுப்பேற்ற எடப்பாடி கே. பழனிசாமி, நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ள நிலையில், பன்னீர்செல்வம் ஆதரவு எம்எல்ஏக்கள் தனி அணியாகச் செயல்பட்டு வருகின்றனர். 

 இந்நிலையில், மதுரைக்கு வியாழக்கிழமை வந்த சரவணனுக்கு, அவரது தொகுதிக்கு உட்பட்ட காமராஜர் சாலை அரசமரம் பிள்ளையார் கோயில் அருகே கட்சியினர் மற்றும் பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர். பின்னர், அங்கிருந்து புதுராமநாதபுரம் சாலையில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் வரை ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார். வழியில் ஏராளமானோர் மாலை அணிவித்து வாழ்த்துக் கூறினர். 

அலுவலகத்தில், முன்னாள் எம்எல்ஏக்கள் எம். முத்துராமலிங்கம், ஆர். சுந்தர்ராஜன், செüராஷ்டிர முன்னேற்றக் கழகம் தலைவர் வி.ஜி. ராமதாஸ், முன்னாள் மண்டலத் தலைவர் பெ. சாலைமுத்து உள்ளிட்ட பலர் வாழ்த்துத் தெரிவித்தனர்.  பின்னர், செய்தியாளர்களிடம் சரவணன் கூறியது: 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வழியில் நடப்பவர் பன்னீர்செல்வம்தான். தொகுதி மக்கள் பலரும் என்னைத் தொடர்பு கொண்டு அவருக்கு ஆதரவு தெரிவிக்குமாறு வலியுறுத்தினர். மக்களின் விருப்பத்துக்கு ஏற்ப இந்த முடிவை எடுத்துள்ளேன். தொகுதி மக்களின் நலனுக்காகத் தொடர்ந்து செயலாற்றுவேன் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com