நாட்டின் வளர்ச்சிக்கு இன்னும் அதிகமான விஞ்ஞானிகள் தேவைப்படுகிறார்கள்: பிரதமர் மோடி வானொலி உரை

பிரதமர் நரேந்திர மோடி மனதின் குரல் என்ற நிகழ்ச்சியின் மூலம்  நாட்டு மக்களுக்கு
நாட்டின் வளர்ச்சிக்கு இன்னும் அதிகமான விஞ்ஞானிகள் தேவைப்படுகிறார்கள்: பிரதமர் மோடி வானொலி உரை

பிரதமர் நரேந்திர மோடி மனதின் குரல் என்ற நிகழ்ச்சியின் மூலம்  நாட்டு மக்களுக்கு இன்று காலை 11 மணிக்கு வானொலியில் உரையாற்றினார். இந்நிகழ்ச்சி அகில இந்திய வானொலியின் அனைத்து அலைவரிசைகளிலும் ஒலிபரப்பானது. அபோது பேசிய அவர் 

பிப்ரவரி 15ம் தேதி இந்திய வரலாற்றின் பெருமைக்குரிய நாள், மங்கல்யான் வெற்றிக்குப் பிறகு ஒரே நேரத்தில் 104 செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவி இஸ்ரோ சாதனை படைத்துள்ளது.

இது இந்தியாவின் பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த சாதனை செய்த ஒரே நாடு இந்தியா தான். இந்தியாவின் சாதனையை உலக நாடுகள் பாராட்டுகின்றன. 104 செயற்கைகோள்களில் இந்தியாவின் கார்டோசாட் 2 டி செயற்கைகோளும் ஏவப்பட்டுள்ளது. இது விவசாயிகளுக்கு பயனளிக்கும் என்று கூறினார்.

மேலும் பிரபஞ்சத்தின் ரகசியங்களை அவிழ்க்க மனிதர்கள் விஞ்ஞானத்தின் மூலம் முயன்று வருகின்றனர். நான் இளைஞர்களிடம் அடிக்கடி சொல்லிக்கொள்வது அறிவியல் மீது கவனம் செலுத்துங்கள். நம் நாட்டின் வளர்ச்சிக்கு இன்னும் அதிகமான விஞ்ஞானிகள் தேவைப்படுகிறார்கள். அனைத்தும் அறிவியல் அனுபங்களால் உருவாக்கப்பட்டுள்ளது. அறிவியல் எல்லையற்றது என்று மகாத்மா காந்தி கூறியுள்ளார். மனித வாழ்வின் தேவைகளை பூர்த்தி செய்திருப்பதில் அறிவியல் மிகப்பெரிய பங்களிப்பை அளித்துள்ளது என்றார். 

மக்கள் பணமில்லா பரிவர்த்தனையை நோக்கி மாறிவருகின்றனர்.  டிஜிட்டல் வர்த்தகம் இன்னும் வளர வேண்டும். விவசாயம் நாட்டின் முதுகெலும்பு. அதன் முன்னேற்றத்திற்கு நாம் இன்னும் அதிகம் செய்ய வேண்டியது இருக்கிறது விவசாயிகளின் கடின உழைப்பால் 2,700 லட்சம் டன் உணவுப்பொருட்களை உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளனர் என்று அவர் பேசினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com