ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் சுவாமி தரிசனத்துக்கு 3 மணி நேரம்

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை ஏராளமான பக்தர்கள் திரண்டதால், சுவாமி தரிசனம் செய்ய 3 மணி நேரமானது.
ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் சுவாமி தரிசனத்துக்கு 3 மணி நேரம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை ஏராளமான பக்தர்கள் திரண்டதால், சுவாமி தரிசனம் செய்ய 3 மணி நேரமானது.

சிவனின் அக்னி ஸ்தலமான திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. முன்பு விழாக்காலங்களில் மட்டுமே கோயிலுக்கு பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக அனைத்து நாள்களிலும் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.

இந்தக் கோயிலுக்கு கடந்த 6-ஆம் தேதி அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கடந்த 24-ஆம் தேதி கோயிலில் மகா சிவராத்திரி விழா நடைபெற்றது. இந்நிலையில், விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை கோயிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

பொது தரிசன வரிசை, கட்டண தரிசன வரிசைகளில் பக்தர்கள் நீண்ட நேரமாக காத்திருந்தனர். கோயில் ராஜகோபுரம் வழியாக பொது தரிசன வரிசையில் வந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய 3 மணி நேரமானதாகத் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com