ஆர்எஸ்எஸ் கூட்டத்துக்கு அனுமதி: 24 மணி நேரத்தில் முடிவெடுக்க கொல்கத்தா போலீஸுக்கு உத்தரவு

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் வரும் 14-ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ள ஆர்எஸ்எஸ் கூட்டத்துக்கு அனுமதியளிப்பது

கொல்கத்தா,

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் வரும் 14-ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ள ஆர்எஸ்எஸ் கூட்டத்துக்கு அனுமதியளிப்பது குறித்து 24 மணி நேரத்துக்குள் முடிவெடுக்க வேண்டும் என்று அந்த மாநில போலீஸôருக்கு கொல்கத்தா உயர் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

கொல்கத்தாவின் கித்தர்போரே பகுதியில் மகர சங்கராந்தி தினமான வரும் 14-ஆம் தேதி ஆர்எஸ்எஸ் பொதுக் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் அந்த அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் கலந்து கொண்டு உரையாற்ற முடிவு செய்துள்ளார்.

இந்தப் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி கேட்டு, கொல்கத்தா நகர காவல்துறை ஆணையரிடம் ஆர்எஸ்எஸ் தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த மனு மீது முடிவெடுக்கவில்லை எனத் தெரிகிறது.

இதையடுத்து, கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த சர்துல் சிங் ஜெயின் என்பவர் மனு தாக்கல் செய்தார். அதில், ஆர்எஸ்எஸ் மனு மீது போலீஸôர் முடிவெடுக்காமல் இருப்பதாகவும், ஆதலால் விரைந்து முடிவெடுக்கும்படி போலீஸôருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த மனு, கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஜாய்மால்யோ பக்ஷி முன்னிலையில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ஆர்எஸ்எஸ் மனு குறித்து சட்ட விதிகளுக்கு உள்பட்டு ஆலோசனை நடத்தி, 24 மணி நேரத்துக்குள் கொல்கத்தா நகர காவல்துறை ஆணையர் முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com