இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வண்டலுர் பூங்கா திறக்கப்படமாட்டாது: அதிகாரிகள் தகவல்

வண்டலூர் பூங்கா வர்தா புயலால் பலத்த சேதம் அடைந்துள்ளதால் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு இந்த பூங்கா திறக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தாம்பரம்: வண்டலூர் பூங்கா வர்தா புயலால் பலத்த சேதம் அடைந்துள்ளதால் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு இந்த பூங்கா திறக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் காணும் பொங்கல் பண்டிகையின்போது வண்டலூர் பூங்காவில் ஏராளமான மக்கள் கூடுவார்கள். சுமார் 1½ லட்சம் பேர் வரை வருவார்கள். இதற்கான ஏற்பாடுகளை பண்டிகைக்கு சில நாட்களுக்கு முன்பே பூங்கா அதிகாரிகள் செய்வார்கள்.

ஆனால் இந்த ஆண்டு வர்தா புயலால் சென்னை பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த புயல் வண்டலூர் பூங்காவையும் விட்டு வைக்கவில்லை. புயலின் கோரதாண்டவத்தால் சின்னாபின்னமான பூங்காவை  சீரமைக்கும் பணி இன்னும் முழுமையாக முடியவில்லை. இதனால் பொங்கல் பண்டிகைக்கான ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை. இதுகுறித்து வண்டலுர் உயிரியல் பூங்கா அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

வார்தா புயலால் வண்டலுர் பூங்காவில் ஆயிரக்கணக்கான மரங்கள் விழுந்தன. அவை வெட்டப்பட்டு பூங்காவுக்குள் வைக்கப்பட்டு இருக்கிறது. பூங்காவில் இருந்து வெளியே இன்னும் கொண்டு செல்லப்படவில்லை.

சீரமைப்பு பணிகள் முழுமையாக முடியாத நிலையில் பொதுமக்கள் அதிக அளவு கூடுவார்கள் என்பதால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இதனால் பொங்கல் பண்டிகைக்கு வண்டலுர் பூங்கா திறக்கப்படவில்லை. சீரமைப்பு பணிகள் முடிய இன்னும் 10 நாட்கள் ஆகும் இவ்வாறு அவர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com